Aran Sei

எல்லா மாநிலங்களும் தங்களுக்குள் தொடர்பு கொள்ள ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்துங்கள் – அமித் ஷா

பிற மொழிகளைப் பேசும் இந்திய மாநிலங்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

‘ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது’- நாடாளுமன்றத்தில் வைகோ பேச்சு

“நாட்டின் ஒற்றுமைக்காக இந்தியாவின் அலுவல் மொழியை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஒன்றிய அமைச்சரவையின் 70% செயல் திட்டங்கள் இப்போது இந்தியில் தயாரிக்கப் பட்டுள்ளதாகவும்” நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் தலைவரான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை அலுவல் மொழியில் தான் நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாகவும், இது நிச்சயமாக இந்தியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`எங்களுக்கு இந்தி மொழியில் கடிதம் எதற்கு’ – சு.வெங்கடேசன் கேள்வி

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்களில் 22,000 இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், அங்கு பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளில் ஹிந்தி கட்டாயமாகப் பயிற்றுவிக்கப் படுகின்றன என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Source : The Hindu

‘அசிங்கமான பெண்களுக்கு திருமணம் செய்ய வரதட்சணை உதவும்’

பாஜகவின் கருத்துக்கு ஊடவியளாலர் கவிதா கஜேந்திரன் கூறியது என்ன?

தெரிந்து கொள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்