Aran Sei

ஆஸ்கர்: மனைவியைக் கிண்டல் செய்த தொகுப்பாளரைக் கன்னத்தில் அறைந்த நடிகர் வில் ஸ்மித்

டிகர் வில் ஸ்மித் மனைவியின் முடியலங்காரத்தை ஆஸ்கர் மேடையில் கிண்டல் செய்த தொகுப்பாளரை அறைந்துள்ளார் ஸ்மித்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கிங் ரிச்சர்ட் எனும் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை நடிகர் வில் ஸ்மித் வென்றுள்ளார்.

செரினா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸின் தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸின் நிஜ வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட இப்படத்தில் ரிச்சர்ட் வில்லியம்ஸாக நடித்த வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வழங்கப்பட்டுள்ளது.

பிர்பூம் வன்முறை: ‘குஜராத் படுகொலைகளை மறந்து, முதலைக் கண்ணீர் வடிக்கிறது பாஜக’ – திரிணாமூல் காங்கிரஸ் விமர்சனம்

2002ம் ஆண்டு அலி திரைப்படத்திற்கும் 2007ம் ஆண்டு பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் படத்திற்காகவும் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வில் ஸ்மித்துக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிடைக்காமல் போனது. 2022ம் ஆண்டு கிங் ரிச்சர்ட் படத்தின் மூலம் ஆஸ்கர் அவரது கைக்கு கிட்டியது. ஆஸ்கர் விருதை பெற்ற அவர் மேடையில் கண் கலங்கியபடியே பேசிய காட்சிகள் இணையத்தில் பரவலாகி வருகிறது.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்படுவதற்கு முன்னதாக வில் ஸ்மித்தின் மனைவியின் சிகை அலங்காரத்தைக் கிண்டல் செய்த தொகுப்பாளர் கிறிஸ் ராக் எனும் நடிகரை கன்னத்தில் அறைந்துள்ளார்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து விலையுயரும் பெட்ரோல், டீசல் – சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

க்ரிஸ் ராக் தனது நகைச்சுவையான பேச்சுக்கு பிரபலமானவர். 94-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த டாக்குமெண்ட்ரி பியூச்சருக்கான விருதை அறிவிக்க மேடையேறியவர், நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் சிகை அலங்காரம் குறித்து பகடி செய்துள்ளார். மனைவியுடன் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த வில் ஸ்மித்தும் அந்த பகடிக்கு சிரித்துக் கொண்டிருந்தவர் திடீரென மேடைக்கு வந்து க்ரிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். யாரும் இதனை எதிர்பார்க்கவில்லை.

ஆனால், பார்வையாளர்கள் பகுதிக்கு திரும்பிய வில் ஸ்மித் அங்கிருந்தபடியே சத்தமாக இருமுறை கெட்டவார்த்தை கூறி, என் மனைவியின் பெயரை உன் வாயால் சொல்லாதே என்றார்.

முன்னதாக, 2016-ல் ஆஸ்கரின் முக்கிய விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் கறுப்பினவத்தவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. ஒட்டு மொத்தமாக அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதனால், ஆஸ்கர் விழாவை புறக்கணிப்பதாகக் கூறி, வில் ஸ்மித் உள்ளிட்ட முக்கியமான கறுப்பின கலைஞர்கள் ஆஸ்கர் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்த புறக்கணிப்புக்கு தலைமை வகித்தவர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித். கறுப்பினத்தவர்களின் விமர்சனத்தை எதிர்கொள்ளும் பொருட்டு அந்த ஆஸ்கர் விழாவில் கறுப்பின நடிகரான க்ரிஸ் ராக்கை பேச வைத்தனர்.

சபர்மதி ஆசிரமத்தை மறுசீரமைக்கும் குஜராத் அரசு – திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த காந்தியின் கொள்ளுப் பேரன்

ஆஸ்கர் விருது வெள்ளைக்காரர்கள் தேர்வு செய்யும் விருதாகிவிடும், அதனால் தான் நான் இங்கு வந்தேன் என்று ஆரம்பித்து அட்டகாசமான உரையை அன்று க்ரிஸ் ராக் பேசினார். கறுப்பின கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதை சுட்டிக் காட்டிய அவர், ஜடா பிங்கெட் ஸ்மித் தலைமையில் கறுப்பின கலைஞர்கள் விழாவை புறக்கணித்ததையும் விமர்சனம் செய்தார்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்