Aran Sei

கலைக்கப்பட்டும் ஆயத தொழிற்சாலை வாரியம் – வாரியத்தின் சொத்துக்களை புதிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு கையளிக்கும் ஒன்றிய அரசு

த்திய அமைச்சரவையின் முடிவின்படி, ஆயுத தொழிற்சாலை வாரியம் கலைக்கப்பட்டு, அதன் சொத்துக்கள், ஊழியர்கள், நிர்வாகம் அனைத்தும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 7 புதிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாற்றப்படுவதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முனிஷன் இந்தியா லிமிடெட், ஆர்மர்ட் வெஹிகள்ஸ் நிகாம் லிமிடெட், அட்வான்ஸ்ட் வெப்பனஸ் அண்ட் எக்கியூப்மெண்ட் இந்தியா லிமிடெட், ட்ரூப்ஸ் கம்ஃபோர்ட் லிமிடெட், யந்திரா இந்தியா லிமிடெட், இந்தியா ஒபெல் லிமிடெட், கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட் ஆகிய பெயரில் புதிய பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பொறுப்புணர்வு, செயல்திறன் மற்றும் போட்டித்தன்மை ஆகியவற்றை அதிகரிக்கும் பொருட்டு 200 ஆண்டுகளாக இயங்குவரும் வெடிபொருள் மற்றும் ராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் 41 தொழிற்சாலைகளை ஒருங்கிணைத்து 7 புதிய பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கு தொடர்பான நீண்ட நாள் கோரிக்கைக்கு ஜூன் 16 ஆம் தேதி ஒன்றிய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடுமையான மின் தட்டுப்பாடு – ஆசிய பொருளாதாரம் சரிவை சந்திக்கும் என்று கணிப்பு

இந்தத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் 70 ஆயிரம் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது என தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், “இந்திய பாதுகாப்பு உற்பத்தி துறையை மேம்படுத்தும் விதமாக ஆயுத தொழிற்சாலை வாரியம் கார்பரேட் மயமாக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 24 ஆம் தேதி பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அக்டோபர் 1 ஆம் தேதி முதல், நாட்டின் வெடிபொருள் மற்றும் ராணுவ உபகரணங்கள் தயாரிக்கும் 41 தொழிற்சாலைகளின் மேலாண்மை, கட்டுப்பாடு, செயல்பாடு மற்றும் பராமரிப்பை புதிதாக தொடங்கப்படும் 7 பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாற்ற இந்திய அரசு முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரோடு இல்லாதவர்களுக்குக் கொரோனா தடுப்பூசிச் சான்றிதழ் – ஒன்றிய அரசு தரும் வினோத விளக்கம்

ஆயுத தொழிற்சாலை வாரியத்தில் இருந்து மாற்றப்பட்டும் ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டுகள்வரை எந்த பொருளதார உதவிகளும் கூடுதல் வழங்கப்பட மாட்டாது. இரண்டு ஆண்டு காலத்திற்குள் புதிய நிறுவனத்திற்கு விதிகள் மற்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு, இந்த ஊழியர்கள் புதிய பொதுத்துறை நிறுவனங்களின் நிரந்தர ஊழியர்களாக கருதப்படுவார்கள்” என அதில் குறிப்பிடிப்பட்டுள்ளது.

Source : The Wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்