Aran Sei

ஐஐடிக்களில் இடஒதுக்கீட்டை கட்டாயம் கடைபிடிக்க உத்தரவிட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் மனு

credits : the hindu

நாட்டில் உள்ள 23 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (ஐஐடி) இட ஒதுக்கீட்டைக் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடுமாறு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, தி வயர்  செய்தி வெளியிட்டுள்ளது.

புவிவெப்ப ஆற்றல் ஆராய்ச்சியாளர் சச்சிதா நந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பிறப்படுத்தப்பட்ட வகுப்பு (27%), பட்டியலின வகுப்பினர் (15%), பழங்குடியின வகுப்பினர் (7.5%) ஆகியோருக்கு உறுதியளிக்கப்பட இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை. இது சட்ட விரோதமானது. தன்னியச்சையானது. அரசியல் அமைப்பிற்கு எதிரானது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம், காரக்பூர், சென்னை, பம்பாய், கான்பூர், ரூர்க்கி, கவுஹாத்தி ஐஐடி இயக்குனர்களுக்கு மத்திய அரசு எழுதியிருந்த கடிதத்ததில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் உதவி பேராசிரியர் மட்டத்திலும், மனிதநேயம் மற்றும் மேலாண்மை துறைகளில் அனைத்து மட்டத்திலும், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் இடங்களை ஒதுக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

பாஜகவின் தேர்தல் அறிக்கை ”வெற்று தேர்தல் அறிக்கை” : மக்கள் பாஜகவின் வாக்குறுதிகளை நம்ப மாட்டார்கள் – செளகாதா ராய்

இதன் தொடர்ச்சியாக, 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு எழுதிய கடித்ததில், நாட்டில் உள்ள 23 ஐஐடிக்களிலும், அனைத்து ஆசிரியர் பணியிடங்களுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டித்து உத்தரவிடப்பட்டிருந்தது.

”கடந்த ஐந்து ஆண்டுகளில்,  ஐஐடிக்களில் ஆராய்ச்சி படிப்பில்,  இட ஒதுக்கீட்டை உறுதியளித்திருக்கும் அளவை விட குறைவாக இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (23.2%), பழங்குடியினருக்கு (2.1%) பட்டியலினத்தவர்களுக்கு (9.1%) இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு தொடங்கி 2019 ஆம் ஆண்டு காலம் வரை மும்பை ஐஐடியில்  மொத்தமுள்ள 26 துறையில் 11 துறைகளில் முனைவர் பட்டப்படிப்பிற்கான சேர்க்கையில் ஒரு பழங்குடியின வகுப்பு மாணவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி வயர் தெரிவித்துள்ளது.

பாஜக அரசு மொழிக்கும் பண்பாட்டிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது : பாஜக வீழ்த்தப்பட வேண்டும் – பிரியங்கா காந்தி வேண்டுகோள்

மேலும், ஐஐடியில் உள்ள அறிஞர்கள், மாணவர்கள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் பல இருந்தாலும், இது போன்ற பிரச்னைகளைத் தீர்க்க, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, நிறுவன ரீதியான வழிமுறைகள் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஐஐடிக்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைச் சேர்ப்பதற்கு தேவையான தரங்களை வெளிப்படுத்தவில்லை. இது முழு செயல்முறையையும் ரகசியமாக வைக்க உதவுகிறது. வட, மத்திய மற்றும் இந்தி பேசும் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் ஐஐடிகளில் உள்ள ஆசிரியர் பதவிகளில் மிகவும் குறைவாக உள்ளது. அதே நேரத்தில், அவர்களின் மக்கள் தொகை தேசிய அளவில் 50 சதவீதமாக  உள்ளது.” என்று அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்