Aran Sei

நீதிமன்ற உரையாடலை வெளியிட தடை கோரிய தேர்தல் ஆணையம் – ’ஊடகங்கள் ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரண்கள்’ – மறுத்த உச்சநீதிமன்றம்

credits : pti

னநாயகத்தின் தூண்களாக உள்ள உயர்நீதிமன்றங்களை விரக்தி அடைய செய்ய இயலாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

நான்கு மாநில சட்டமன்ற தேர்தலின்போது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறிய தேர்தல் ஆணைய அதிகாரிகள்மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது.

குற்றத்தின் தீவிரத்தன்மையில் கவனம் செலுத்தி பிணை வழங்க வேண்டும் – உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவு

இந்நிலையில், கடந்த மே 1 அன்று தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தக் கருத்துக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணையின்போது, “நீதிமன்றத்தில் நடைபெறும் உரையாடல்களைப் பதிவிட ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என உத்தரவிட முடியாது. ஊடகங்கள் ஜனநாயகத்தின் முக்கியமான பாதுகாப்பு அரண்கள்” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண்கள் பதிலடி கொடுக்காதது தான் துன்புறுத்தலுக்கு காரணம் – உச்சநீதிமன்ற அமர்வு

மேலும், நீதிமன்றங்களில் நடைபெறும் உரையாடல்களைப் பதிவிட தடைவிதிக்க இயலாது.பொறுப்புணர்வை உருவாக்க எல்லாவற்றையும் குறித்தும் செய்தி வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, “நீதித்துறை நடைமுறைகளின் புனிதத்தை நாங்கள் காக்க வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதிகளும், தலைமை நீதிபதிகளும் சுயாதீனமாக கருத்து தெரிவிப்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும், நீதிமன்றங்களில் நடப்பதை ஊடகங்கள் பதிவிடுவதின் வழியே நாங்கள் கண்ணியமாக வழக்கை விசாரிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த இயலும்” என்றும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்திருப்பதாக தி வயர் செய்தி கூறுகிறது.

கொரோனா அதிகம் பரவுவதால் பெருமளவில் மக்கள் கூடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துகுறித்து கூறிய உச்சநீதிமன்றம், “தவறுகளைத் திருத்திக்கொள்ளவதற்காகவே நீதிமன்றங்கள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன. அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு தேர்தல் ஆணையம் செய்த தவறை சரி செய்ய வேண்டும். உள்நோக்கத்துடன் உயர்நீதிமன்றம் கருத்து கூறவில்லை” என்று கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்