Aran Sei

விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க மறுத்த மாநிலங்களவைத் தலைவர் – எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் அவை ஒத்திவைப்பு

விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என கோரி எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் போராட்டம் நடத்தியதால், இன்று (ஏப்ரல் 4) மாநிலங்களவை நடவடிக்கைகள் தோராயமாக 50 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளின்  உறுப்பினர்கள் பலர் நோட்டீஸ் கொடுத்துள்ளபோது, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அக்கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார்.

இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் அவைக்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் தொடர்ந்ததால், மாநிலங்களவையை மதியம் 12 மணி வரை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஒத்திவைத்துள்ளார்.

8 ஆண்டுக்கால ஆட்சியில் பெட்ரோல், டீசல் வரி மூலம் ரூ.26 லட்சம் கோடி சம்பாதித்த ஒன்றிய அரசு – ப.சிதம்பரம் தகவல்

இன்று (ஏப்ரல் 4), பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 40 காசுகள் உயர்ந்துள்ளது.

இதன் வழியாக, கடந்த 14 நாட்களில் 12 முறை உயர்த்தப்பட்டு மொத்தமாக லிட்டருக்கு ரூ.8.40 உயர்ந்துள்ளது.

நான்கு மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இந்த விலை முதல் முறையாக மார்ச் 22 அன்று திருத்தப்பட்டது.

உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.109.34 ஆகவும், டீசல் விலை ரூ.99.42 ஆகவும் உள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலையுயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை – 14 நாட்களில் ரூ.8.40 உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து தான் காரணம் என சொல்லப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்