Aran Sei

பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைவோம் – எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தில் எழுப்பப்படவுள்ள பிரச்னைகள் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க, அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள மல்லிகார்ஜுன கார்கே, “நவம்பர் 29 ஆம் தேதி காலை 9.45 மணிக்கு காங்கிரஸ் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்துக்கு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய பிரச்னைகள் மற்றும் கருத்துகள் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிப்போம்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் எழுப்பும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க, அக்கட்சியின் நாடாளுமன்ற வியூகக் குழு தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்துக்கு சென்றனர். குளிர்கால கூட்டத்தொடரில் விலை உயர்வு உட்பட பிரச்சனைகளை காங்கிரஸ் எழுப்ப முடிவு செய்துள்ளது.

குளிர்காலக் கூட்டத்தொடருக்கான ஒன்றிய அரசின் திட்டங்களில், கிரிப்டோகரன்சி மீதான சட்டம் உட்பட 26 புதிய மசோதாக்கள் மற்றும் மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான மற்றொரு மசோதா ஆகியவை அடங்கும்.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்