Aran Sei

‘வேண்டும்.. வேண்டும்.. நீதி வேண்டும்..’ – நாடாளுமன்றத்தில் தமிழில் முழங்கிய எதிர்கட்சிகள்

ன்றிய அரசு  வலுக்கட்டாயமாக மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்றுகையில், வேண்டும்.. வேண்டும்.. விவாதம் வேண்டும்..என தமிழில் எதிர்கட்சிகள் முழங்கின என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிர்ந்த கருத்தில், “பொதுவாக, நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் முழக்கங்கள் எழுப்பப்படும். இன்று ஒன்றிய அரசு வலுக்கட்டாயமாக மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்றுகையில், மொத்த எதிர்கட்சிகளும் முதல் முறையாக தமிழில், ‘வேண்டும். விவாதம் வேண்டும்.’ என்று முழங்கின.” என்று கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் அரவிந் குணசேகர் தனது டிவிட்டர் பக்கத்தில், “மக்களவையில் பஞ்சாப் காங்கிரஸ் உறுப்பினர் ஜஸ்பீர் சிங் கில் தமிழில், “வேண்டும்.. வேண்டும்..” என முழக்கத்திற்கு தலைமை தாங்க, எதிர்கட்சி உறுப்பினர்கள் அதை பின்தொடர்ந்து, “நீதி வேண்டும்” என முழக்கினர்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆம், தமிழ் மொழி இன்று எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்