Aran Sei

12 எம்.பிக்கள் இடைநீக்கம் – உத்தரவை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடருமென எதிர்க்கட்சியினர் அறிவிப்பு

டைபெற்றுக்கொண்டிருக்கின்றன நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

நேற்று முன்தினம்(நவம்பர் 29), காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்  செய்யப்பட்டனர். குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வலதுசாரிகளுக்கு சாவர்க்கர் தேவைப்படுவது ஏன்? – வரலாறும் விளக்கங்களும்

இந்நிலையில், இன்று(டிசம்பர் 1), நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டுள்ளார். நடைபெற்றுக்கொண்டிருக்கும் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஒன்றிணைத்த எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் பங்கெடுக்காமல் இருந்து விலகி இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியபடி ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதோடு, மாநிலங்களவை உறுப்பினர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திமுக, சிவசேனா, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி, கேரள காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

‘நீட் தேர்வு பாதிப்பைக் கண்டறிய ஏதேனும் ஆய்வு செய்தீர்களா?’- திமுகவின் கேள்வியும் ஒன்றிய அரசின் பதிலும்

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக விரோதமானது என்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சவுகதா ராய், “நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையே ஒன்றிய அரசு தாழ்த்திவிட்டது. இடைநீக்கத்தை திரும்பப் பெறாவிட்டால், எங்களது போராட்டம் தொடரும்” என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்