Aran Sei

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – சிபிஎம் கருத்தரங்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

பாஜக அல்லாத மாநிலங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒன்றிய அரசின் முயற்சிகளுக்கு எதிராகவும், மாநில அரசாங்கத்தின் கூட்டாட்சி கட்டமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கவும் எதிர்க்கட்சிகள் போராட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  பேசியுள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆம் கட்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.

இந்து ராஷ்ட்ரா – இந்துஃபோபியா; ஒன்றிய அரசின் இரட்டை சவாரிக்கான காரணம் என்ன? – மு.அப்துல்லா

அப்போது பேசிய அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆம் மாநாட்டுக்கு என்னை அழைத்து, ஒன்றிய, மாநில உறவுகள் பற்றி பேச அழைத்ததை நான் எண்ணிப்பார்க்கிறேன். இந்த மாநாடு நடைபெறும் இடம் கேரளா. ஒன்றிய மாநில உறவு பற்றி பேச வந்திருக்கும் நான் வாழும் இடம் தமிழ்நாடு. இதை விட மிகப்பெரிய ஒற்றுமை வேறு எதுவும் இருக்க முடியாது.

மாநில உரிமைகளை காப்பதில் சிங்கம் போல் செயல்படுகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அவர் எனக்கு வழிகாட்டும் முதல்வராக திகழ்கிறார். செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் சிறை வைக்கப்பட்ட கண்ணூர் மண்ணில் இந்த மாநாடு நடைபெறுகிறது. ஒரு மாநிலத்தில் ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பினராயி விஜயன் இருக்கிறார். ஒரு கையில் போராட்ட குணம், ஒரு கையில் தொலைநோக்கு திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார் பினராயி விஜயன். தமிழ்நாடு முதல்வரான நானும், கேரள முதல்வரும் தலையாட்டி பொம்மையாக இருந்தால் பிரச்னை இருந்திருக்காது. பெரும்பான்மையோடு வென்ற அரசு இருக்கும்போது ஆளுநரை வைத்து ஆட்சியை நடத்த முயற்சிக்கப்படுகிறது.

மாநிலங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு வழங்குவதில்லை. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரை வைத்து மசோதாக்களை கிடப்பில் போடுகின்றனர். ஆளுநர் மூலமாக மாநிலங்களில் ஆட்சி செய்ய நினைப்பது முறையல்ல. 2 முறை நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் இன்றுவரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை.

குதுப் மினார் வளாகத்தில் இடிக்கப்பட்ட இந்து கோவில்களை மீண்டும் கட்ட வேண்டும் – விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அரசாங்கம், 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி முதன் முதலில் கலைக்கப்பட்டது கேரளத்தில்தான். மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சி அரசாங்கத்துக்கு 1959ஆம் ஆண்டு இது நடந்தது. தமிழ்நாட்டிலும் மக்களின் ஆதரவுடன் அமைந்த மக்களாக் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு 1976 மற்றும் 1991ஆம் ஆண்டு இரண்டாவது முறையும் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி கலைக்கப்பட்டது. எனவே, ஒன்றிய, மாநில உறவைப் பற்றிப் பேசும் உரிமை எனக்கும் சரி, கேரளா, தமிழ்நாட்டுக்கு உண்டு.

மாநிலங்களின் உரிமைக்காக போராட நாம் தயாராக இருக்க வேண்டும். மாநில உரிமையை காத்திட மாநில முதல்வர்கள் குழுவை அமைத்திட வேண்டும். மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் கொண்டதாக அரசியலமைப்பை மாற்ற வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒற்றை தன்மையை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. ஆங்கிலேயர்கள் செய்ய நினைக்காததை கூட பாஜக செய்ய முயல்கிறது. ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே மதம், ஒரே கட்சி என மாற்ற பாஜக முயல்கிறது.

‘அசாமிய மொழியை அழிக்க ஒன்றிய அரசு முயல்கிறது’ – அமித் ஷாவின் பேச்சுக்கு வடகிழக்கு மாநில அமைப்புகள் கண்டனம்

மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மக்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு மட்டும் ரூ.21 ஆயிரம் கோடி நிதி வர வேண்டியுள்ளது. மாநில வளர்ச்சிக்கான திட்டக்குழு, தேசிய வளர்ச்சிக் குழுக்களை மத்திய அரசு கலைத்து விட்டது. நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் இன்றி பாஜக சட்டங்களை இயற்றுகிறது.

இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால் முதலில் மாநிலங்கள் காப்பற்றப்பட வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்திய நாடு காப்பாற்றப்படும். வீடுகள் இருந்தால்தான் அது தெரு. தெருக்கள் இருந்தால்தான் அது ஊர். ஊர்கள் சேர்ந்தால்தான் அது மாநிலம். மாநிலங்கள் இணைந்தால்தான் அது நாடு. ஆனால் சிலர், அரசியல் அரிச்சுவடியை மாற்றுகிறார்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Source: newindianexpress, ONmanorama

இந்தி குறித்த ஒன்றிய அரசின் உள்துறை அமித்ஷா பேசியது குறித்த பகுப்பாய்வு.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்