Aran Sei

‘பெகசிஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை வேண்டும்’ – நாடாளுமன்றத்தில் இருந்து நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சிகள்

பெகசிஸ் ஸ்பைவேர் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகவுள்ளன.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் பெகசிஸ் பிரச்சினையை எழுப்புவதற்கு பதிலாக, உச்ச நீதிமன்றத்தை அணுக பல எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

பள்ளிகள் திறக்கப்படாததால் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்களின் கற்றல் திறன் – அறிவியலாளர்கள் முதமைச்சர்களுக்கு கடிதம்

“பெகசிஸ் பிரச்சினையானது நம் நாட்டிற்கு மிகவும் தீவிரமான பாதுகாப்பு தொடர்பான கவலையாக உள்ளது. பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் பக்கச்சார்பற்ற மற்றும் நியாயமான விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தை அணுக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

நாளை (ஆகஸ்ட் 2) முதல் நாடாளுமன்றத்தில் தங்கள் செயற்பாடுகளை மாற்ற எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்த வாரத்திலிருந்து பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு, வேலையின்மை மற்றும் கொரோனா பெருந்தொற்றில் கட்டுப்பாட்டில் தவறான நிர்வாகம் போன்ற பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப முடிவு செய்துள்ளோம்  என்றும் ஏஎன்ஐ-யிடம் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

முன்னதாகவே, பெகசிஸ் ஸ்பைவேர் விவகாரம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரியிருந்தன.

source; ani

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்