Aran Sei

பெட்ரோல் விலையுர்வை கண்டித்து மாட்டு வண்டி பயணம் சென்ற வாஜ்பாய் – பழைய காணொளியை பகிரும் எதிர்கட்சியினர்

1973 ஆம் ஆண்டு, ஜன சங்க தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் நாடாளுமன்றம் சென்ற பழைய காணொளியை எதிர்கட்சியினர் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலையால், சென்னை, பஞ்சாப் மற்றும் கேரளாவின் சில நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ .100-ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமரும் ஜன சங்கத்தின் தலைவருமான வாஜ்பாய், மாட்டு வண்டியில் நாடாளுமன்றத்திற்கு செல்லும் காணொளியை பகிர்ந்துள்ளார்.

அதில், “1973-ல் பெட்ரோல் விலை ஏழு பைசாக்கள் உயர்த்தப்பட்டபோது, எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரிய காட்சி. அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு மாட்டு வண்டியில் நாடாளுமன்றத்திற்கு வந்தார். (புதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளால், நாடாளுமன்ற வளாகத்திற்குள் வாகனம் நுழைவதற்கு இன்று சாத்தியமில்லை!)” என்று அவர் கூறியுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

இதே காணொளியை பகிர்ந்துள்ள திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர் டெரெக் ஓ பிரையன், “வரலாறு. அச்சோ. 1973 ஆம் ஆண்டில் பெட்ரோல் விலை சில பைசாக்கள் (7 பைசா?) உயர்ந்தபோது, ​​அடல் பிஹாரி வாஜ்பாய் தனது எதிர்ப்பை தெரிவித்து மாட்டு வண்டியில் நாடாளுமன்றம் சென்றார்.” என்று கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்டபேரவை உறுப்பினரான சோம்நாத் பாரதியும் இக்காணொளியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்