Aran Sei

விவசாயிகளின் நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களாக எதிர்கட்சிகள் உறுப்பினர்கள்: ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் ஒருபகுதியாக நடைபெற்று வரும் ‘விவசாயிகள் நாடாளுமன்றத்தில்’ நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். அப்போது, மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யாததால் ஒன்றிய அரசுக்கு எதிராக போராடும் விவசாயிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

14 எதிர்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்த விவசாயிகள் நாடாளுமன்றத்தில் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்து, விவசாயிகள் நாடாளுமன்றத்தில் செயற்பாடுகளையும் ஒன்றிய அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கண்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் திமுக, சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சியை சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆம் ஆத்மி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் இதில் கலந்துக்கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள ராகுல் காந்தி, “போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு எங்களுக்கும் மூன்று விவசாய விரோத சட்டங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் ஆதரவளிக்க வந்துள்ளோம். தற்போது, நாடாளுமன்றத்தில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் விவாதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால், ஒன்றிய அரசு அதை அனுமதிக்க மறுக்கிறது.” என்று கூறியுள்ளார்.

Source; newindianexpress

தொடர்புடைய பதிவுகள்:

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

பணிய மறுக்கும்  விவசாயிகள் – மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் அறிவித்த வேளாண் சங்கங்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்