Aran Sei

கிரிமினல் குற்றவாளிகளின் உடல், உயிரியல் மாதிரிகளை சேகரிக்கும் மசோதா நிறைவேற்றம் – தனியுரிமைக்கு எதிரானது என மக்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

அமித் ஷா - Image Credit : National Herald India

கிரிமினல் வழக்கின் குற்றவாளிகள் மற்றும் கைதிகளின் உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளை காவல்துறையினர் சட்டப்பூர்வமாகச் சேகரிக்கும் மசோதா நேற்று (மார்ச் 4) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது ஒரு நபரின் தனியுரிமைக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி வாரம்: மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவுள்ள மசோதாக்கள் என்னென்ன?

கிரிமினல் குற்றவாளிகள் மற்றும் கைதிகளின் அனைத்து தரவுகளும் பாதுகாக்கப்படும் என்றும், இந்த மசோதா சட்டத்தின் பாதுகாவலராகச் செயல்படும் என்று ஒன்றிய அரசின் அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கைதிகளை அடையாளம் காணும் சட்டம், 1920 யை மாற்ற முற்படும் இந்த மசோதா ‘கடுமையானது’ என்றும், இந்தியாவை ‘காவல்துறை அரசாக’ மாற்றலாம் என்று கூறிய எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்தன.

இந்த வரைவுச் சட்டம் மீதான விவாதத்தில், இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

கார்ப்பரேட்களிடமிருந்து 720 கோடியை நன்கொடையாக பெற்ற பாஜக -ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

இந்த மசோதா கைதிகளை அடையாளம் காணும் சட்டம், 1920 யை மாற்ற முயல்கிறது. ஆனால் இப்போது முன்மொழியப்பட்ட சட்டம் ஆங்கிலேய காலனித்துவ வாதிகளால் இயற்றப்பட்ட சட்டத்தைவிட குறைவான பாதுகாப்புகளையே கொண்டுள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர் மௌவா மொய்த்ரா கவலை தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா இந்தியாவை ஒரு காவல்துறை அரசாக மாற்றவும், அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்படலாம் என்று பகுஜன் சமாஜ் கட்சி மக்களவை உறுப்பினர் டேனிஷ் அலி தெரிவித்துள்ளார்.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்