Aran Sei

பாஜக ஆட்சியும் என்கவுண்ட்டரில் பலியான 146 பேரும் – உ.பி.யில் அரங்கேறுகிறதா மனித உரிமை மீறல்?

த்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2௦17 ஆம் ஆண்டு, பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை குறைந்தபட்சம் 3,302 பேர் காவல்துறை நடத்திய என்கவுண்டரில்  காயமடைந்துள்ளனர்.

மேலும், இதுவரை   8,472 என்கவுண்டர் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக   3,302 பேர் காயமடைந்துள்ளதாகவும், 146 பேர் உயிரிழந்தாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

காவல்துறையால் சுடப்பட்டதில் காயமடைந்து ஊனமானவர்கள் குறித்து எந்தத் தகவலையும் காவல்துறை திரட்டி வைக்கவில்லை என்றும் அம்மாநில  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவங்களில் 13 காவல்துறை  அதிகாரிகள்  உயிரிழந்துள்ளதாகவும்,  1,157 பேர் காயமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக  18,225 கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, மீரட் பகுதியில் 2,839 என்கவுன்டர்களும், 5,288  கைதுகளும், 61 உயிரிழப்பும், 1,547 பேர் காயமடைந்துள்ளதாகவும்  காவல்துறையின் தகவலில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று ஆக்ரா பகுதியில்1,884 என்கவுன்டர்களும், 4,878  கைதுகளும்,18 உயிரிழப்பும், 218 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

source: the indian express

தொடர்புடைய பதிவுகள்:

வந்தனாவின் வெற்றி தேசத்தின் வெற்றி- நேரில் சென்று சு.வெங்கடேசன் வாழ்த்து

கடந்த மாதம் 31,637 கணக்குகள் முடக்கம் – புகார்களின் மீது ட்விட்டர் நிர்வாகம் நடவடிக்கை

 

 

 

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்