Aran Sei

கொரோனாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை – பிரதமர் மோடிக்கு ஒய்வு பெற்ற இந்திய ஆட்சி பணியாளர்கள் கடிதம்

ந்தியாவில் கொரோனாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை என பிரதமர் மோடிக்கு ஒய்வு பெற்ற இந்திய ஆட்சி பணியாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

”கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதையும் அச்சுறுத்துகிறது. இந்திய குடிமக்களை மட்டும் விட்டுவிடப் போவதில்லை என்பதை நாங்கள் அறிவோம். ஆயினும், மருத்துவ உதவிக்கான குடிமக்களின் கூக்குரல்களும் ஆயிரக்கணக்கில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையிலும், ஒன்றிய அரசின் செயல்கள் தினசரி மனதை மரத்து போகச் செய்கின்றன” என குறிப்பிட்டுள்ளனர்.

‘முன்களப்பணியாளர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் செலுத்த 20 லட்சம் தடுப்பு மருந்துகளையாவது தாருங்கள்’ – மம்தா பிரதமருக்கு கடிதம்

”அமைச்சரவையின் தோய்ந்த செயல்பாடுகள், மாநில அரசுகளுடனான, குறிப்பாக எதிர்கட்சி ஆளும் மாநில அரசுகளுடன் கூட்டாட்சி உறவு மோசமடைந்து வருகிறது. நிபுணர்கள் மற்றும் நாடாளுமன்ற குழுவினருடன் ஆலோசனைகள் மேற்கொள்ளாதது, நிபுணர் குழுக்களின் ஆலோசனையைச் சரியான நேரத்தில் எடுக்கத் தவறியது, மாநில அரசுகளுடான ஒருகிணைப்பு இல்லாதது ஆகியவை ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. மேலும் அவை தற்போது சமூகப் பிரிவினருக்கான பேரழிவு நிகழ்வுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.” என குற்றம்சாட்டியுள்ளனர்.

“சர்வதேச மற்றும் நம்நாட்டு விஞ்ஞானகள் முன்கூட்டியே எச்சரித்தும், முதல் மற்றும் இரண்டாம் அலைக்கு இடையிலான காலத்தில், மருத்துவ படுக்கைகள், ஆக்சிஜன் உற்பத்தி, வென்டிலேட்டர்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களைப் போதிய அளவு இருப்பு வைக்க எந்த முன்னெடுப்பையும் அரசு மேற்கொள்ளவில்லை. உலகிற்கே தடுப்பூசி வழங்குவதில் முதன்மையான நாடாக இந்தியா இருந்தும், போதிய தடுப்பூசிகளை இருப்பு வைக்க முறையான திட்டமிடாமல் இருந்ததை மன்னிக்க முடியாது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்காக உழைத்த மருத்துவர் கொரோனா தொற்றால் மரணம் – ஏழைகளுக்கும், மாணவர்களுக்கும் இலவச மருத்துவம் வழங்கியதாக மக்கள் புகழாரம்

”நீங்களும் உங்களுடைய அமைச்சரவை சகாக்களும் காட்டிய மெத்தனம், அச்சுறுத்தலிலிருந்து கவனத்தை திசை திருப்பியது மட்டுமல்லாமல், மாநில அரசுகள் மற்றும் மக்கள்மீது பழி சுமத்தியது. இன்று உலக நாடுகளின் உதவியை நாடும் அளவிற்கு உங்களின் ’ஆத்மனிர்பார் பாரத்’ (தற்சார்பு இந்தியா) நிர்பந்திக்கப்பட்டுள்ளது.” என குற்றம்சாட்டியுள்ளனர்.

”மார்ச் 2020, கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்து மாநில அரசுகளுக்குத் தேவையான நிதிகுறித்து ஒன்றிய அரசு ஒருபோதும் சரியாக கணக்கிடவில்லை. பிரதமர் தேசிய நிவாரண நிதி நடைமுறையில் இருக்கும்போது புதிதாக பிஎம் கேர்ஸ் என்ற ஒன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் பெறப்படும் நிதிக்கு எந்தவொரு வெளிப்படைத்தன்மையும் இல்லை. கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து பல்வேறு மாநில முதல்வர்கள் நிவாரண நிதிகள் மற்றும் தன்னார்வல அமைப்புகளுக்குச் சென்றிருக்க வேண்டிய நிதியை பிஎம் கேர்ஸ் ஈர்த்தது. மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையும் உடனடியாக வழங்கப்படுவதில்லை. கொரோனா தொற்ற சமாளிக்க அவர்களுக்கு உதவியிருக்கலாம். ஆனால், அரசு ’மத்திய விஸ்டா திட்டம்’ என்ற பெயரில் தேவையற்ற செலவீனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான நிதியை வேறு ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்படுத்தியிருக்கலாம். தன்னார்வல அமைப்புகள்மீது, குறிப்பாக வெளிநாட்டு பங்களிப்பைப் பெறுபவர்கள்மீது விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள், தொற்றுநோய் காலத்தில் நிவாரணம் வழங்குவதில் அவர்களுக்கும் பெரும் தடையாக உள்ளது” என தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றைக் கண்டறிய சுய பரிசோதனை கருவி – அனுமதியளித்த இந்தியா மருத்துவ ஆய்வுக் கழகம்

”ஐந்து சட்டமன்ற தேர்தல்கள் தவிர்க்க முடியாதவையாக இருந்திருக்கலாம், ஆனால் நீங்களும் (பிரதமர் மோடி) மற்றும் கட்சி நிர்வாகிகளும் பல்வேறு மாநிலங்களில் பொதுக் கூட்டங்களைக் கூட்டியதன் மூலம் அனைத்து எச்சரிக்கைகளையும் காற்றில் வீசினீர்கள். இந்த நேரத்தில் உங்கள் கட்சி, மக்களுக்கும் மற்ற கட்சியினருக்கும் ஒரு முன்னுதாரனமாக செயல்பட்டிருக்க வேண்டும். மேலும், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைச் சிறிதும் பொருட்படுத்தாது, ஹரித்வாரில் கும்பமேளா நடத்தப்பட்டது. இவ்விருண்டு நிகழ்வுகளும் கொரோனா இரண்டாவது அலையில், பெருந்தொற்று அதிகமாக பரவக் காரணமாக இருந்ததோடு, கிராமங்களிலும் பரவக் காரணமாக அமைந்துவிட்டது.” என குற்றம் சாட்டியுள்ளனர்.

”முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட கோவிட் நெருக்கடியின் “திறமையான” நிர்வாகத்தின் கதையாடலை நிர்வகிப்பதில் உங்கள் அரசாங்கம் அதிக அக்கறை காட்டுகிறது. பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள், தொற்று பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கைபற்றிய உண்மையான தரவுகள் கூட வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதில்லை. இது பல்வேறு மாநிலங்களில் தேவையான மருத்துவ வசதிகளைப் போதுமான அளவு வழங்குவதற்கும், தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பொருத்தமான நடவடிக்கைகளை உருவாக்குவதற்கும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.” என குறிப்பிட்டுள்ளனர்.

அரசை விமர்சித்த நிபுணர் குழு உறுப்பினர் ஷாஹித் ஜமீல் ராஜினாமா – அரசின் நிர்பந்தமே காரணம் என்று உறுப்பினகர்கள் கருத்து

பின்வரும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் :

  • அனைத்து இந்தியர்களுக்கும் உலகளாவிய தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும். தடுப்பூசி கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களிலிருந்தும் கொள்முதல் செய்வதை மையப்படுத்த வேண்டும். அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகளை மாநில அரசுகள் மற்றும் பிற  நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டும்.
  • நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான ஆக்சிஜன் படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் இதர மருத்து வசதிகள் இருப்பதை உறுதி செய்ய மாநில அரசுகளுடன் திறம்பட ஒருங்கிணைக்க வேண்டும்.
  • கிராமம் மற்றும் நகர்புற பகுதிகளில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.
  • மத்திய விஸ்டா மறுவளர்ச்சித் திட்டம் போன்ற அத்தியாவசியமற்ற திட்டங்களுக்கான செலவினங்களை நிறுத்தவும், மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு மாநிலங்களுக்குப் போதுமான நிதியைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
  • தற்போதுள்ள உபரி உணவு தானிய இருப்புக்களை வரைந்து, சமூகத்தின் விளிம்புநிலை மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குடும்பங்களுக்கு, தொற்றுநோய், பசி மற்றும் வாழ்வாதார நெருக்கடியின் மூர்க்கத்தனம் குறையும் வரை வேலை வாய்ப்புகளை இழந்த அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் இலவச ரேஷன்களை வழங்க வேண்டும்.
  • பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான தற்போதைய ஊட்டச்சத்துத் திட்டங்கள் மற்றும் முன்பள்ளி வயதுக் குழுக்களில் உள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்குத் துணை ஊட்டச்சத்து ஆகியவற்றை மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து முழுமையாக வழங்கவும்.
  • சமூகத்தின் தேவைப்பிரிவினருக்கு தொடர்ச்சியான செலவுகள் மற்றும் எதிர்பாராத அவசரநிலைகளை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக நடப்பு நிதியாண்டிற்கான மாதாந்திர வருமான ஆதரவை வழங்குதல். பொருளாதார வல்லுநர்கள் ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு 7000 ₹ பரிந்துரைத்துள்ளனர், இது குறைந்தபட்ச ஊதியத்திற்கு சமமானது.
  • கொரோனா மேலாண்மை மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் நிதியைப் பெறுவதற்காக அரசு சாரா நிறுவனங்கள்மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை உடனடியாக அகற்றவும்.
  • அனைத்து தரவுகளையும் பொது களத்தில் வைக்கவும் மற்றும் ஆதாரம் அடிப்படையிலான கொள்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும்.
  • அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளையும் ஆலோசனை வழங்குவதற்கும் மீளாய்வு செய்வதற்கும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தொற்றுநோயின் கட்டுப்பாட்டைக் கண்காணிப்பதற்கும் மத்திய மட்டத்தில் அனைத்துக் கட்சிக் குழுவை உருவாக்க வேண்டும்.

மேற்கூறியவை அரசியல்-நிர்வாக மட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்றாலும், மிக முக்கியமான நடவடிக்கை. தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களின் இழப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு மக்களின் நம்பிக்கையையும் மன உறுதியையும் கட்டியெழுப்புவது தொடர்பானது. இரக்கமும் அக்கறையும் அரசாங்கக் கொள்கையின் அடித்தளமாக இருக்க வேண்டும். இந்த நெருக்கடியை நாம் எவ்வளவு திறம்பட கையாள்கிறோம் என்பதை வரலாறு நமது சமூகம், உங்கள் அரசாங்கம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, தனிப்பட்ட முறையில் நீங்கள் மதிப்பிட வேண்டும்.” என தெரிவித்துள்ளனர்.

ஆட்சிப் பணி முன்னாள் அலுவலர்கள் எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தில் 116 ஒய்வு பெற்ற இந்திய ஆட்சி பணியாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்