Aran Sei

பாஜக கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் – உச்சநீதிமன்றம் விசாரிக்க வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள்

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வில் இஸ்லாமியர்களின் மீது  வெறுப்பைத் தூண்டும் முழக்கம் எழுப்பபட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென  நீதிக்கான அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 8 அன்று,  பாஜகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாயா ஒருங்கிணைத்தக் கூட்டத்தில்   ‘இஸ்லாமியர்களைக் கொல்ல வேண்டும்’  என்று வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் வகையில் முழக்கம் எழுப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாது, இது மதச்சார்பின்மை மற்றும் பிற சட்டம் வழங்கியுள்ள மதிப்புகள்  மீதான தாக்குதல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இந்தக் கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற “நேஷனல் தாஸ்தக்”   யூடியூப் சேனல் நிரூபர் அனுமோல் பிரிதமை , அக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் “ஜெய் ஸ்ரீராம்’ எனக் கூறச்சொல்லியதாகவும், அதற்கு அவர் என் மனதிற்கு தோன்றினால் சொல்வேன். கட்டாயப்படுத்தி ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொன்னால் நான் சொல்லமாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

 

 

இந்நிலையில், இந்தச் சம்பவம்குறித்து உச்சநீதிமன்றம் தன்னிசையாக விசாரிக்க வேண்டுமெனவும், இந்த நிகழ்வில் இஸ்லாமியர்கள் மீது படுகொலையில் ஈடுபடுமாறு நேரடியாக அறைகூவல் விடப்பட்டுள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்தக் கூட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டப் போது தடுக்காத காவல்துறை மீது டெல்லி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்தக் கடிதத்தின் வாயிலாக கோரியுள்ளனர்.

இதே போன்று, டெல்லி உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கமும்  தனியே கடிதம் அனுப்பியுள்ளது.

source: தி வயர்

தொடர்புடைய பதிவுகள்:

பாஜகவினர் நடத்திய கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கங்கள் – ஜெயஸ்ரீ ராம் எனக் கூற மறுத்த பத்திரிக்கையாளரை ஜிஹாதி என மிரட்டிய இந்துத்துவவாதிகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் புகார் – வழக்குப் பதிந்த லஞ்ச ஒழிப்புத்துறை

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்