Aran Sei

‘ஒஎன்வி விருதுக்கு வைரமுத்து தேர்வு செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்வோம்’ – கண்டனங்களை தொடர்ந்து ஒஎன்வி அகாதெமி அறிவிப்பு

லையாள கவிஞர் ஒ.என்.வி விருதுக்குப் பாடலாசிரியர் வைரமுத்து தேர்வு செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்வோம் என்று ஒஎன்வி கலாச்சார அகாதமி அறிவித்துள்ளது.

மறைந்த கேரள கவிஞர் ஒஎன்வி குரூப் நினைவாக, ஒஎன்வி கலாச்சார அகாதெமி, இலக்கியவாதிகளுக்கு வருடந்தோறும் விருது வழங்கி வருகிறது. இந்தச் சூழலில், இந்த ஆண்டிற்கான ஒஎன்வி விருது, கவிஞரும் பாடாலாசிரியருமான வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மலையாள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அனில் வல்லத்தொல், கவிஞர்கள் ஆலங்கொடி கிருஷ்ணன் மற்றும் பிரபா வர்மா ஆகியோர் இணைந்து கவிஞர் வைரமுத்துவை இவ்விருதுக்காக தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

வைரமுத்துவுக்கு விருது வழங்குவது ஒஎன்விக்கு செய்யும் உச்சகட்ட அவமரியாதை : திரைக்கலைஞர் பார்வதி கண்டனம்

இதுகுறித்து, கருத்து தெரிவித்த திரை கலைஞர் பார்வதி திருவொத்து, “ஒஎன்வி நமது பெருமை. கவிஞராகவும் பாடலாசிரியராகவும் அவருடைய பங்களிப்பு மகத்தானது. மேலும், அது நமது கலாச்சாரத்தை எவ்வாறு செழுமைப்படுத்தியுள்ளது என்பதை எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இந்த முக்கியமான காரணத்தினால் தான், பல்வேறு பாலியல் சீண்டல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவருக்கு அவரின் பெயரைக் கொண்டுள்ள விருதை வழங்குவது உச்சகட்ட அவமரியாதை என்று நான் கூறுகிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கேரளம், தமிழகத்தை சேர்ந்த பல கலைஞர்களும், செயற்பாட்டாளர்களும் இத்தேர்வுக்கு கண்டங்களைத் தெரிவித்திருந்தனர்.

போலி செய்தியைப் பரப்பிய இந்துத்துவவாதிகள் : உண்மையை உடைத்த சின்மயி

இந்நிலையில், இன்று (மே 28), விருதை அறிவித்த ஒஎன்வி கலாச்சார அகாதமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மலையாள கவிஞர் ஒஎன்வி விருதுக்கு வைரமுத்து தேர்வு செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்வோம்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், அகாதமியின் தலைவர் அடூர் கோபாலகிருஷ்ணன் கையெப்பமிட்டுள்ளார்.

பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்டோர், கவிஞர் வைரமுத்து மீது சட்டரீதியாக புகாரளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்