Aran Sei

கொரோனாவைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்குதான் ஒரே வழி – மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கோரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்த குறைந்தபட்ச வருமான உத்திரவாதமான நியாய் திட்டத்துடன் கூடிய முழு ஊரடங்கு தான் தீர்வு என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இந்திய அரசுக்கு இன்னும் புரியவில்லை.   கொரோனாவை கடுப்படுத்த ஒரே வழி முழு ஊரடங்கும், பாதிக்கப்படுபவர்களுக்கான குறைந்தபட்ச வருமானத்திற்கு உத்டதிரவாதம் அளிக்கும் நியாய் திட்டமும் தான். அரசாங்கத்தின் செயலற்றத்தன்மை பல அப்பாவி மக்களைக் கொன்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.

விளிம்புநிலை மக்களுக்கான குறைந்தபட்ச வருமான உத்திரவாதத்தை வழங்கும் நியுண்டம் ஆய் யோஜனா (நியாய்) என்பது காங்கிரஸ் கட்சியின் திட்டங்களில் ஒன்று. இது காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்