Aran Sei

’மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையால் தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைவார்கள்’ – ராகுல் காந்தி

த்திய அரசின் கொரோனா தடுப்பூசிக் கொள்கைகளால் ஏழைகள், விளிம்புநிலையில் இருக்கும் மக்கள் புறக்கணிக்கப்படு தொழிலதிபர்களே பயனடைவார்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

தற்போது கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 2.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஹரித்வாரில் நடைபெற்று கொண்டிருக்கும் கும்பமேளாவால் வட இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமடைந்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. கும்பமேளாவில் பங்கேற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர், சாமியார்கள் உள்ளிட்ட பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

பத்திரிகை சுதந்திரத்திற்கான தரவரிசையில் இந்தியா 142 வது இடம் – இந்துத்துவவாதிகளால் கேள்விக்குறியாகும் கருத்துரிமை என ஆய்வில் தகவல்

கொரோனாவைக் கட்டுப்படுத்த தனியார் மருத்துவமனைகள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்யலாம் என்று தெரிவித்தது. 50 சதவீதம் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், 50 சதவீதத்தை வெளிச்சந்தையிலும் மருந்து நிறுவனங்கள் விற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.

தடுப்பு மருந்துகளை வெளிசந்தைகளில் விற்பதால் மருந்தின் விலை கடுமையாக உயரும் என்று எதிர்கட்சிகள் கூறியுள்ளன.

தமிழகத்திற்கான ஆக்ஸிஜனை தரமறுக்கும் மோடி அரசின் செயல் தமிழின விரோதமானது – திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கை குறித்து விமர்சித்துள்ளார். அதில், “மத்திய அரசின் தடுப்பூசி கொள்கைகளால் ஏழைகள், விளிம்புநிலையில் இருக்கும் மக்கள் புறக்கணிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பெருங்கோடு உள்ளது. . மத்திய அரசின் செயல்பாடுகளால் வறியவர்கள் பணம், உடல்நலம், வாழ்க்கையை இழப்பர். சில தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைவார்கள் என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்