Aran Sei

உலக பட்டினி குறியீடு: ஜெர்மன் அமைப்பிற்கும் ஒன்றிய அரசுக்கும் வலுக்கும் வாதம்

லக பட்டினி குறியீடு பட்டியலைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய அளவுகோள் உண்மைக்குப் புறம்பாக ஊதிப்பெறுக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் 3.9 விழுக்காடு அங்கன்வாடி குழந்தைகள் மட்டுமே ஊட்டச்சத்து குறைபாடுடன் காணப்படுகிறார்கள் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த லாப நோக்கற்ற அமைப்பான வெல்துங்கர்ஹில்ஃப் இந்த ஆண்டுக்கான உலக பட்டினி குறியீட்டு பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்தப் பட்டியலானது கருத்துக் கணிப்பின் அடிப்படையில் மட்டும்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்ற ஒன்றிய அரசின் குற்றச்சாட்டை வெல்துங்கர்ஹில்ஃப் மறுத்துள்ளது.

2021-ம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா 101-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு, 107 நாடுகளுக்கான பட்டியலில், 94-வது இடத்தில் இந்தியா இருந்தது.

‘மக்கள் பட்டினியில் இருக்கும்போது 5 ட்ரில்லியன் டாலர் வருமானத்திற்கு கனவு காண்கிறார் மோடி’ – அகிலேஷ் யாதவ்

உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 76-வது இடத்திலும், வங்கதேசம் 76-வது இடத்திலும், மியான்மர் 71-வது இடத்திலும், பாகிஸ்தான் 92-வது இடத்திலும் உள்ளன.

இப்பட்டியலுக்கு தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, வெல்துங்கர்ஹில்ஃப் அமைப்பு இந்தப் பட்டியலைத் தயாரிக்க அறிவியலற்ற முறையை பயன்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தது.

இதற்குப் பதிலடிக்கொடுக்கும் வகையில் பேசியுள்ள உலக பட்டினி குறியீட்டின் ஆலோசகரான மிரியம் வைமர்ஸ், “உணவு மற்றும் வேளாண் சங்கத்தின் (ஃப்ஏஓ) தொலைபேசி வாயிலான கருத்துக்கேட்பான ‘உணவு பாதுகாப்பின்மை அனுபவம் அளவீடு’ முறையை இந்த உலக பட்டினிக் குறியீடு பட்டியலுக்குப் பயன்படுத்தவில்லை. மாறாக, ஊட்டச்சத்து குறைபாட்டின் குறியீட்டு அளவே இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் உணவு இருப்புநிலை குறித்த தரவை கவனத்தில் கொண்டு இந்த உலக பட்டினி குறியீடு பட்டியல் மதிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

உலக பட்டினி குறியீட்டில் அபாய நிலையில் இந்தியா: மறுக்கும் ஒன்றிய அரசு – உலக பட்டினி குறியீட்டின் ஆலோசகர் பதிலடி

இந்நிலையில், நேற்று(அக்டோபர் 17), ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அங்கன்வாடி மையங்களில்  பதிவுசெய்யப்பட்ட பயனாளிகளின் தற்போதைய தரவுகளில்படி, 6 மாதங்கள் தொடங்கி 6 வயது வரையிலான 7.79 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்தை அளக்கும் திட்டமான போஷன் டிராக்கரின் கீழ் (16-10-2021 வரை) உள்ளன. இவர்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 30.27 லட்சமாக உள்ளது. இது 3.9 விழுக்காடு மட்டுமே” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “இந்தப் பயனாளிகள் சமுதாயத்தின் ஏழ்மையான மட்டங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களில் குறைந்த அளவு ஊட்டச்சத்து குறைபாடானது(மொத்தமாக ஒப்பிட்டு பார்த்தால்) தவறான தரவு சேகரிப்பு முறையால், இந்தியாவில் அதிக அளவில் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளதாக ஊதிப் பெருக்கப்பட்டுள்ளது” என்று ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது.

Source: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்