இந்தியாவில் 100 கோடி மக்களும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தவில்லை, 31 விழுக்காடு மக்கள் மட்டுமே இரு தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவருமான அசாசுதீன் ஒவைசி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரைவத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதிருந்த ஒவைசி தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். மீரட் மாவட்டத்தில் உள்ள கிதோர் எனுமிடத்தில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அசாசுதீன் ஒவைசி பங்கேற்று பேசும்போது, பிரதமர் மோடி நாட்டில் 100 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திவிட்டதாகக் கூறுகிறார். உண்மையில், 31 விழுக்காடு மக்கள் மட்டும்தான் இரு தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், இப்போதிருந்தே முஸ்லிம்கள், தலித் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்படுகின்றன என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உங்களிடம் (மக்கள்) வருவார்கள், கனிவுடன் பேசி வாக்குக் கேட்பார்கள். உங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போல், கருணை இருப்பதுபோல் பேசுவார்கள் ஆனால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து பிரதமர் மோடி பெருமிதமாகப் பேசியிருந்தார். அது குறித்துப் பேசிய ஒவைசி “மத்திய அரசுத் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தியபோது, மாநிலங்களையும், மக்களையும் அவர்கள் தலைவிதி எனக் கைவிட்டதுவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் தலையிட்டு தடுப்பூசிக் கொள்கையை ஆய்வு செய்தபின்புதான், அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி கிடைத்தது, மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையும் மாற்றப்பட்டது” என்று நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவருமான அசாசுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
Source: deccanherald
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.