Aran Sei

21% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியதை பாஜக ஏன் கொண்டாடிக் கொண்டிருக்கிறது? – கர்நாடக எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா கேள்வி

நாட்டு மக்கள் தொகை வெறும் 21 விழுக்காட்டினருக்கும் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை பாஜக ஏன் கொண்டாடி வருகிறது என கர்நாடக எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுருக்கும் ட்விட்டர் பதிவில், “100 கோடி தடுப்பூசி என்று சொல்லும்போது பிரமிப்பாக தெரியலாம். ஆனால், அதன் விவரங்களில் தான் உண்மை அடங்கியுள்ளது. 139 கோடியில் 29 கோடி பேருக்கும் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது 21 விழுக்காட்டினருக்கு மட்டுமே முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. இதை ஏன் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். வெறும் 21 விழுக்காடு தடுப்பூசி செலுத்தியதற்காகவா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமத்துவத்திற்கான நீண்ட போராட்டமும் மறுக்கப்படும் அரசியல் உரிமைகளும் – மீனா கந்தசாமி

”வெறும் 29 கோடி பேருக்கு  முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 42 கோடி பேருக்கு ஒரு டோஸ் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. 62 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை. வெறும் 29 கோடி பேர் (21 விழுக்காடு) மட்டுமே தான் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என்பது இந்தியாவிற்கு ஆபத்து. இந்தியா ஆபத்தில் இருப்பதை தான் பாஜகவினர் கொண்டாடி வருகிறார்களா?” என அவர் விமர்சித்துள்ளார்.

அனைத்து ரயில்களிலும் முதியோர் சலுகை உள்ளிட்ட 53 சலுகைகளை திரும்ப வழங்குக வேண்டும் – சு.வெங்கடேசன் வேண்டுகோள்

”அமெரிக்காவில் 56 விழுக்காடு, சீனாவில் 70 விழுக்காடு, கனடாவில் 71 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் வெறும் 21 விழுக்காட்டினருக்குத் தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடி அவர்களே கொண்டாடுவதற்கு முன்னால் எண்ணிக்கையை அதிகப்படுத்துங்கள். கொண்டாடுவதை நிறுத்திவிட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்துங்கள்” என கர்நாடக எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

Source : The New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்