Aran Sei

காஷ்மீர் பண்டிட்களுக்கு அறிவிக்கப்பட்ட வீடுகளில் 17% மட்டுமே கட்டப்பட்டுள்ளது – அமித்ஷா ஆய்வுக்குப் பின் உள்துறை அமைச்சகம் தகவல்

Credit: The Hindu

காஷ்மீர் பண்டிட்களுக்கு அறிவிக்கப்பட்ட வீடுகளில் வெறும் 17 விழுக்காடு வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பண்டிட்கள் மறுவாழ்வு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அமித் ஷா ஆய்வு மேற்கொண்ட பிறகு, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 83 வது எழுச்சி நாள் அணிவகுப்பில் கலந்து கொள்ள ஜம்மு சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து ஆய்வு நடத்தினார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2015 ஆண்டு, 6 ஆயிரம் காஷ்மீர் பண்டிட்களுக்கு ரூ 920 கோடி செலவில் வீடுகள் கட்டித்தரப்படும் என ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. இதில், 1025 வீடுகள் மட்டுமே பகுதி அல்லது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 50 விழுக்காடு வீடுகளின் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லைஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மார்ச் 9 தேதி, மாநிலங்களவையில் சிவ சேனா கட்சியைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள ஒன்றிய அரசிின் இணையமைச்சர் நித்தியானந்த ராய், “அனைத்து வீடுகளும் 2023 ஆம் ஆண்டிற்கு கட்டி முடிக்கப்படும்என்று கூறியுள்ளார்.

“1488 வீடுகள் முடிக்கும் தருவாயில் உள்ளன. 2,744 வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய வீடுகளுக்கான ஒப்பந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதுஎன அமைச்சர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்