Aran Sei

“கொரோனா சிகிச்சைக்கு 152 ஆக்சிஜன் படுக்கைகளே உள்ளதாக அறிவித்த மாநகராட்சி – அசாதாரண சூழலை நோக்கிச் செல்கிறதா குஜராத்?

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில், 152 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் மட்டுமே தற்போது கைவசம் உள்ளதாக அஹமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கடந்த ஏப்ரல் 27 அன்று அஹமதாபாத் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் வசதிகொண்ட 152 படுக்கைகள் மட்டுமே உள்ளதாகவும், அதுவும் விரைவிலேயே நிரம்பிவிடும் என்று அறிவித்துள்ளது.

குஜராத் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு – அதிகரித்து வரும் உயிரிழப்புகள்

கடந்த 15 நாட்களுக்கு முன்னர் அஹமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக 2000 க்கும் மேல் உயர்ந்திருந்தது.

இந்நிலையில், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும்நிலையில் பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வரவேண்டுமென மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் கொரோனா வார்டாக மாற்றப்பட்ட மசூதி – ரமலான் மாதத்தில் இதுவே மகத்துவமென மசூதி நிர்வாகம் அறிவிப்பு

மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த 25,000 பேரை புதிதாக பணியில் ஈடுபடுத்தி இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்