Aran Sei

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை – அமலாகும் அவசரச் சட்டம்

ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்வதற்கான அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வது தொடர் நிகழ்வாக இருக்கிறது. இதனால் பல குடும்பங்கள் நிர்கதியாகியுள்ளன. புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மிக்கு பலர் பலியாகியுள்ளனர்.

இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தினர்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை – எடப்பாடி அறிவிப்பு, ஸ்டாலின் கேள்வி

இதையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் , ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்யும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

தமிழக இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் விளையாட்டுகள்

இந்த அவசர சட்டம், 1930ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம், 1888 ஆம் ஆண்டு சென்னை நகரகாவல் சட்டம் மாற்றும் 1859ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் சட்டம் ஆகியவற்றிற்குச் சட்டதிருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வழி வகுக்கிறன .

இந்தச் சட்டத்தால், ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து ஈடுபடுவோரையும் அதில் ஈடுபடுத்தப்படும் கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் தடை செய்யப்படும்.

தடையை மீறி விளையாடுபவர்களுக்கு 5,000 அபராதமும் ஆறு மாத சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.

ஆன்லைனில் பணத்தையும் உயிரையும் எடுக்கும் சூதாட்டம் – சியாம் சுந்தர்

ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் (online gaming house ) வைத்திருப்போர்களுக்கு 10,000 அபராதமும் 2 வருட சிறை தண்டனையும் வழங்கப்படும்.

இவ்விளையாட்டில் பணபரிவர்தன மாற்றங்களை இணையவழி மூலம் மேற்கொள்வதைத் தடுக்கப்படும்.

இவ்விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் தண்டிக்கவும் இந்த அவசரச் சட்டம் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்