Aran Sei

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் நினைவாக இணைய அருங்காட்சியகம் – உருவாக்கிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் நினைவாக இணைய அருங்காட்சியத்தை ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் உருவாக்கியுள்ளனர்.

இந்த அருங்காட்சியகத்தை https://www.justaction.cc/museum என்ற இணைய முகவரியில் காணலாம். இந்த அருங்காட்சியகத்தில் உயிரிழந்தவர்கள் பெயர், வயது, உயிரிழந்ததற்கான காரணம், அவரின் புகைப்படங்கள், அவர்குறித்து பிறர் பேசியிருக்கும் கருத்துகள் உள்ளிட்ட தகவல்களை நாம் காண முடியும்.

2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில், ஸ்டெர்லை ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயது சிறுமி ஸ்னோலின் உட்பட் 13 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்காணோர் படுகாயமடைந்தனர்.

தொடங்கியது 15வது அசாம் சட்டபேரவையின் முதல் கூட்டத்தொடர்: விரைவில் பசு பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்ய பாஜக அரசு திட்டம்

இதன் மூன்றாவது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

முன்னதாக, உயிரிழந்தவர்கள் நினைவாக மே 12 ஆம் தேதி முதல் 22 தேதி வரையிலான உலகளாவிய உண்ணாவிரத போராட்டத்திற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், கீழ்கண்ட கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் வலியுறுத்தி தூத்துக்குடி மக்களுக்காக குரல் கொடுங்கள் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

பிரதமரின் கண்ணீரை முதலை கண்ணீருடன் ஒப்பிடாதீர்கள்; முதலைகள் பாவம் – தி டெலிகிராப்

தூத்துக்குடி மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் “

  1.  “வேதாந்தா தூத்துக்குடியில் தனது செயல்பாடுகளை மீண்டும் எப்போதும் தொடங்காமலிருப்பதை உறுதிபடுத்த வேண்டும்.
  2. சுற்றுச்சூழல் சட்டங்கள் பலவற்றை மீறியதற்கும், பித்தலாட்டம் பல நிகழ்த்தியதற்கும் வேதாந்தாவின் நிர்வாகிகள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.
  3. 2018 படுகொலைக்குப் பொறுப்பான போலீசாரை அடையாளம் கண்டு அவர்களின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  4. வேதாந்தா மற்றும் அதன் இயக்குனர்கள்மீது மோசடி மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களை அத்துமீறியதற்காக வழக்குத் தொடரப்பட வேண்டும்.
  5. தேசிய மனித உரிமைகள் ஆணையம் தூத்துக்குடி விசாரணையை மீண்டும் திறந்து அதன் கண்டுபிடிப்புகளைப் பகிரங்கப்படுத்த வேண்டும்.
  6. தூத்துக்குடி படுகொலை தொடர்பான விசாரணையை விரைவுபடுத்துவதற்காக சாட்சிகளை ஆன்லைனில் விசாரிக்க நீதிபதி அருணா ஜகதீசன் குழுவிற்கு உத்தரவிட வேண்டும்.

வீட்டிலிருந்தபடியே போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் போராட்டதில் பங்கேற்கும் மக்கள் தூத்துக்குடி மக்களுக்கு நீதி கேட்கும் பதாகைகளுடன் எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பக்கங்களில் பகிருமாறும் ஸ்டெர்லை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்