Aran Sei

அசாமில் பூர்வகுடி இஸ்லாமியர்களை கணக்கெடுக்கும் பணி – இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது

சாமில் இணையதளம் வாயிலாக இஸ்லாமியர்களைக் கணக்கெடுக்கும் பணியை அசாம் ஜனகோஸ்தியா சமன்னாய் பரிஷத் (ஜேஎஸ்பிஏ) என்ற அமைப்பு தொடங்கியிருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

புலம்பெயர்ந்த இஸ்லாமியர்கள், வங்காள வம்சாவழியைச் சார்ந்த அல்லது வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்கள் ஆகியவர்களிடம் இருந்து அசாம் இஸ்லாமியர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக முதல் முறையாக இந்த இணையதள கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் இஸ்லாமியர்களைப் பழங்குடி இனங்களிலிருந்தும் குழுக்களிலிருந்தும் மதம் மாறிய கோரியாக்கள், ஆயுதங்களும் பாத்திரங்களும் செய்வதற்காக அஹோம் அரசர்களால் அழைத்துவரப்பட்ட மோரியாக்கள், கோச்-ராஜ்பன்ஷி சமூகத்திலிருந்து குறிப்பாக மதம் மாறிய தேஷி என மூன்று பிரிவுகளாக ஜேஸ்பிஏ பிரித்துள்ளதாக தி இந்து செய்தி தெரிவிக்கிறது.

‘நீங்கள் ஓட்டுக்காக மட்டும் தான் எங்களை கண்டுகொள்வீர்களா?’ – அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பிய உயிரிழந்தவரின் மகள்

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் சிறு பதிப்பாக கருதப்படும், இந்தக் கணக்கெடுக்கும் பணி மூன்று மாதம் கால நடைபெற இருக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1800-களில் பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதற்கு முந்தைய  இஸ்லாமியர்களை பூர்வகுடிகளாக ஜேஎஸ்பிஏ கருதுவதாகவும், அதனால் தான் தேயிலை தோட்டங்களில் பணியாற்றுவதற்காக ஆங்கிலேயர்களால் மத்திய  இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களிலிருந்து மதமாறிய ஜோலாக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என தி இந்து கூறியுள்ளது.

2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில், இந்திய குடியுரிமை வேண்டி விண்ணப்பித்த 3.3 கோடி பேரில் 19.06 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது. 1985-ம் ஆண்டு அசாம் உடன்படிக்கையின்படி, மார்ச் 24, 1971-ம் தேதிக்குப் பிறகு அசாமில் குடியேறியவர்கள் வெளிநாட்டவர்கள் அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என கருதப்படுவர்.

கும்பமேளா சென்று திரும்பும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்- கர்நாடக அரசு அறிவிப்பு

”அசாம் புத்தாண்டான ஏப்ரல் 15-ம் தேதி jspacensus.com என்ற இணையதளத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். 2021-ம் ஆண்டிற்குள் இதனை முடித்து விடலாம் என்று நம்புகிறோம்” என ஜேஎஸ்பிஏவின் தலைமை அமைப்பாளர் சையத் மோமினுல் ஓவால் கூறியுள்ளார்.

விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யயும்போது பதிவேற்ற வேண்டிய ஆவணங்களின் பட்டியல் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை மற்றும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் நிரந்தர கணக்கு எண் (சிறுவர்களுக்கு கட்டாயமில்லை), கிராமத் தலைவர், நகராட்சி வாரியம், நகரக்குழு அல்லது வேறு தகுதிவாய்ந்த அதிகாரியால் அளிக்கப்பட்ட சான்றின் நகல் மற்றும் ஒரு விண்ணப்பதாரரின் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் பட்டியலிடும் ஜேஎஸ்பிஏயால் அங்கீகாரம் செய்யப்பட்ட அமைப்புகளால் அளிக்கப்பட்ட சான்றின் நகல் ஆகியவை அவற்றில் அடங்கும்.

இந்த இணையதளம் ஜே.எஸ்.பி.ஏ.வுடன் அங்கீகரிக்கப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட 17 நிறுவனங்களையும் பட்டியலிடுகிறது. இந்த அமைப்புகளில் தேசி ஜனகோஸ்தியோ மஞ்ச், அசாம், அக்ஸோமியா முஸ்லீம் கல்யாண் பரிஷத், கிலோன்ஜியா அக்ஸோமியா முசோல்மன் உன்னாயன் பரிஷத், ஹோடோ கிலோன்ஜியா முஸ்லீம் ஓய்க்யோ மஞ்ச் ஆகியவை அடங்கும்.

சிறுபான்மையினர் மீது வெறுப்பை தூண்டும் அமெரிக்க இணையதளம் – பாஜக ஆதரவாளர்களின் செயல்திட்டமென ஆய்வில் அம்பலம்

ஜே.எஸ்.பி.ஏ ஒரு இலவச அழைப்பு எண்ணையும் அதன் அனைத்து துணை நிறுவனங்களின் தொலைபேசி எண்களையும் வழங்கியுள்ளது.

“அசாமில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர, சில புலம்பெயர்ந்த இஸ்லாமியர்கள் முன்முயற்சியால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இது மிகவும் அவசியமானது. எங்கள் மதமும் பெயர்களும் ஒரே மாதிரியாக இருக்கலாம், ஆனால் அஹோம் மற்றும் கோச் அரசர்களால் வழங்கப்பட்ட ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பழங்குடி இஸ்லாமியர்கள் கொண்டுள்ளனர்,” என ஓவால் கூறியுள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அசாமில் 1.4 கோடி இஸ்லாமியர்களில், 40 லட்சம் பேர் பூர்வகுடிகள் என ஜேஎஸ்பிஏ கூறியிருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்