Aran Sei

‘விலைவாசி உயர்வை எதிர்த்து கிளர்ந்தெழுவோம்’ – போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்

விலைவாசி உயர்வை எதிர்த்துக் குரல் கொடுங்கள் என்று காங்கிரஸ் கட்சி இணையவழி பரப்புரையைத் தொடங்கியுள்ளது. மக்களைத் துன்பத்தில் தள்ளிவிட்டு, வரியை ஈட்டுகிறது மத்திய அரசு என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது என்றும் இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளவதால், அவற்றின் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று (மார்ச் 5) விலைவாசி உயர்வுக்கு எதிராகக் குரல்கொடுப்போம் என்று இணையவழி பரப்புரையை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. இதில், பொது மக்கள் அனைவரும் பங்கேற்று விலைவாசி உயர்வுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

பெட்ரோல் விலை குறைந்தால் “ராமரும் மகிழ்ச்சியடைவார்” – சிவசேனா கருத்து

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “பாஜக = பர்டன் (சுமை) ஜனதா கட்சி. எத்தனை விரைவாக பாஜகவினர் கொள்ளைக்கு எதிராகப் பேசுகிறோமோ, அத்தனை விரைவாக நாடு நலம் பெறும். வாருங்கள் எங்களுடன் இணையுங்கள். வாருங்கள்.” என்று அழைப்பு விடுத்துள்ளது. #SpeakUpAgainstPriceRise என்ற ஹேஷ்டேக்கை இணைத்துள்ளது.

அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பதிவில், “விலைவாசி உயர்வு என்பது சாபம். மக்களை விளைவாசி உயர்வு எனும் துன்பத்தில் தள்ளி, தன்னுடைய வரிவருவாயை மத்திய அரசு ஈட்டுகிறது. நாட்டை அழிக்கும் செயலுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள்.” என்று கோரி,  #SpeakUpAgainstPriceRise என்ற ஹேஸ்டேக்கை இணைத்துள்ளார்.

மேலும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்த காணொளி ஒன்றையும்  ராகுல் காந்தி தனது ட்வீட்டில் பதிவேற்றியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “விலைவாசி உயர்வுக்கு எதிராகக் குரல் கொடுங்கள். மோடி அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சாமானிய மக்களின் பாக்கெட்டை காலி செய்து, பாஜகவின் கஜானாவை நிரப்புகிறது. இந்தியா இதற்குமேல் பொறுமையாக இருக்காது. இந்தியா கிளர்ந்தெழுவோம், விலைவாசி உயர்வுக்கு எதிராகக் குரல் கொடுப்போம்.” என்று அழைப்புவிடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்