Aran Sei

நாட்டின் 22 % சொத்துக்கள் 1% பேரிடம் குவிந்துள்ளது – பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

ந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கையும், மக்களிடையே சமத்துவமின்மையும் அதிகரித்து வருவதாகவும், 2021ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் ஐந்தில் ஒரு பகுதி வளங்கள் ஒரு விழுக்காடு மக்களிடம் உள்ளது. 13 சதவீத வருமானம் மட்டுமே நாட்டின் பாதியளவு மக்களிடம் இருக்கிறது என பிரெஞ்சு பொருளாதார ஆய்வறிஞர் தாமஸ் பிக்கெட்டியை உள்ளடக்கிய ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

உலகில் சமத்துவமற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்தியாவில் வயது வந்தோரின் சராசரி ஆண்டு வருவமானம் என்பது ரூ.2 லட்சத்து 4200 ஆக இருக்கிறது. மக்கள் தொகையில் 50 சதவீத மக்களின் ஆண்டு வருமானம் என்பது வெறும் ரூ.53 ஆயிரத்து 610 ஆக இருக்கிறது. ஆனால், 10சதவீத மக்கள் 20 மடங்கு அதிகமாக வருமானம் ஈட்டுகிறார்கள், அதாவது ஆண்டுக்கு ரூ.11 லட்சத்து 66 ஆயிரத்து 520 வருமானம் பெறுகிறார்கள் என்கிறது அவ்வாய்வறிக்கை.

இந்தியா ஏழைகள் நிரம்பிய, சமதத்துவமற்ற நாடாகவும், செல்வந்தர்கள் உயர்ந்து தனித்துவமாகத் தெரியும் நாடாக இருந்து வருகிறது. இந்திய மக்களின் சராசரி குடும்பச் சொத்து என்பது ரூ. 9 லட்சத்து 83 ஆயிரத்து10 ஆக இருக்கிறது. கடந்த 1980களின் நடுப்பகுதியில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்,  தாராளமயமாக்கள் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டபின், உலகளவில் மக்களிடையே வருமானத்திலும், சொத்துக்கள் சேர்ப்பதிலும் பெரும் சமத்துவமின்மை காணப்படுகிறது.

பாலின ஏற்றத்தாழ்வுகள் இந்தியாவில் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. பெண் ஊழியர்களின் வருமானப் பங்கு என்பது 18சவீதமாக இந்தியாவில் இருக்கிறது. ஆனால் சீனா தவிர்த்து ஆசியாவில் இது மிகக் குறைவாகும். உலகளவில் இந்த சதவீதம் மிகக்குறைவு. மத்திய கிழக்கு நாடுகளில் பெண் தொழிலாளர்கள் வருமானப் பகிர்வு 15 சதவீதமாக இருக்கிறது.

உலகளவில் அதிகமான வருமானம் உள்ள நாடுகளிலும் பாலின சமத்துவமின்மை இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் இருக்கிறது. ஆனால்,சமத்துவம் இருக்கும் நாடுகளில் ஒன்றாக சுவீடன் இருக்கிறது.

குறைந்தவருமானம், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் சமத்துவமின்மை அதிகாக இருக்கிறது. குறிப்பாக பிரேசில், இந்தியாவில் வருமானச் சமத்துவமின்மை அதிகரித்துள்ளது. அதிகமான அளவில் சீனாவும், குறைந்த அளவில் சமத்துவமின்மை இருக்கும் நாடுகளில் மலேசியா, உருகுவே இருக்கின்றன.

கொரோனா வைரஸால் பொருளாதாரத்தில் ஏற்பட்டசிக்கல்கள், நெருக்கடிகள் சமதத்துவமின்மை அளவை மேலும் அதிகரித்துவிட்டன. குறிப்பாக செல்வந்தர்களுக்கும், சாமானியர்களுக்கும் இடையிலான வேறுபாடு அதிகரித்துள்ளது என்று பிரெஞ்சு பொருளாதார ஆய்வறிஞர் தாமஸ் பிக்கெட்டியை உள்ளடக்கிய ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்