Aran Sei

நாட்டின் வளர்ச்சிக்காக “ஒரே நாடு ஒரே தேர்தல்” – பிரதமர் நரேந்திர மோடி

”ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது விவதாத்திற்குரிய விஷயமல்ல,  இது இந்தியாவின் தேவை” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இன்று மாநில சட்டமன்றங்களின் சபாநாயகர்கள், பேரவை செயலாளர்கள், மக்களவை, மாநிலங்களவை தலைமை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட 80வது அகில இந்திய வருடாந்திர மாநாட்டில் காணொலி மூலம் கலந்துக்கொண்டு பிரதமர் உரையாற்றினார்.

முன்னதாக 2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த (26/11) தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய அவர் ” தற்போதைய சூழலில் இந்தியா தீவிரவாதத்தை புதிய திட்டங்களின் வழியாகவும் நவீன வழிமுறைகள் மூலமாகவும் எதிர்கொள்வதாக” கூறினார்.

26/11 மும்பைத் தாக்குதலைத் தடுத்திருக்க முடியுமா? – விடை வேண்டி நிற்கும் கேள்விகள்

”இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதலான 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலை இந்தியா என்றும் மறக்காது” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் வழியாக மும்பையை வந்தடைந்தனர். இவர்கள் நடத்திய தாக்குதலில் 18 பாதுகாப்புபடை வீரர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 60 மணி நேரம் நடைபெற்ற தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

credits : indian express
credits : indian express

பின்னர் தேர்தல் குறித்து பேசிய பிரதமர் ”ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெறும் விவாதத்திற்குரிய விஷயமல்ல,  இது இந்தியாவின் தேவை” என வலியுறுத்தினார்.

”பல்வேறு இடங்களில் ஒரு சில மாத இடைவேளையில் தொடர்ந்து தேர்தல் நடைபெறுவதால் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் பாதிப்படைகிறது, எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற விஷயத்தை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று பிரதமர் கூறினார்.

”=மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல், பஞ்சாயத்து தேர்தல் என அனைத்து தேர்தலுக்கும் ஒரு பொது  வாக்காளர் பட்டியலை பயன்படுத்த வேண்டும் என்றும் ஒவ்வொரு தேர்தலுக்கும் தனித்தனியாக வாக்காளர் பட்டியலை வெளியிடுவது அரசின் வளங்களை வீணடிக்கும் செயல் என்றும் அவர்  கூறினார்.

இறுதியாக ”21 ஆம் நூற்றாண்டில் சவால்களை எதிர்கொள்ள அரசியலமைப்புச் சட்டம் தான் நமக்கும் வழிகாட்டும் கலங்கரை வெளிச்சம்” என்றும் “அரசியலமைப்புச் சட்டத்தை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்” என்றும் அரசியலமைப்புச் சட்ட தினமான இன்று பிரதமர் கூறியுள்ளார்.

மோடிக்கு எதிராக ட்வீட் – கைது செய்யப்பட்ட இளைஞர்

இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம், 2015-ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெற்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான நவம்பர் 26-ம் தேதி இந்த தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்