Aran Sei

வீட்டுக்கு ஒருவர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் – ஊர் கூடி முடிவெடுத்த பஞ்சாப் கிராம விவசாயிகள்

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு வீட்டுக்கு ஒருவரை அனுப்பி வைக்கப் பஞ்சாப் கிராமம் மக்கள் முடிவு செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. அனுப்பி வைக்க மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்ப்ப பெறகோரி டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26-ம் தேதி டெல்லி நோக்கிய ட்ராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. கலவரத்திற்கு காரணம் வலது சாரிகள்தான் என்று எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலர் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

ஓபிசி தொகுப்பு இட ஒதுக்கீடு: ரோகிணி ஆணையத்திற்கு கால நீட்டிப்புக் கூடாது – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

டெல்லி எல்லையில் காஸிபூர், சிங்கு, திக்ரித் உட்பட விவசாயிகள் பேராட்டம் நடைபெறும் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு இணைய சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.

இந்நிலையில், பஞ்சாபின் பதிந்தா மாவட்டத்தைச் சேர்ந்த விர்க் குர்த் கிராம பஞ்சாயத்து, டெல்லி எல்லையில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒரு உறுப்பினராவது அனுப்பி வைப்பததென முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து விர்க் குர்த் கிராம பஞ்சாயத்துத் தலைவர் மஞ்சித் கவுர் ஏஎன்ஐயிடம்  “ டெல்லி எல்லையில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒரு உறுப்பினராவது அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளோம். போராட்டங்களுக்குச் செல்ல மறுப்பவர்களுக்கு ரூ .1,500 அபராதம் விதிக்கப்படும், அபராதம் செலுத்தாதவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

‘மகாத்மாவின் ஆவியைக் குடித்தான் பேயன்’ – பேரறிஞர் அண்ணா

உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகளின் ஒற்றுமையைக் காட்டவும், காசிப்பூர் எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகச் சென்று உடன் போராடுவதற்காக விவசாயிகளை அணிதிரட்டும் மகாபஞ்சாயத்துக்கள் நடைபெற உள்ளதாக ஏஎன்ஐ செய்திகள் தெரிவிக்கின்றன.

மதுராவின் நவுஜீல் பஜ்னாவில் உள்ள மோர்கி இன்டர் கல்லூரியில் 120 கிராம விவசாயிகள் கொண்ட ஒரு மகாபஞ்சாயத்து நடைபெறும். இதில் ராஷ்டிரிய லோக் தளம் துணைத் தலைவர் ஜெயந்த் சவுத்ரி பங்கேற்கவுள்ளார். பாரதிய கிசான் யூனியன் தலைவர் திகம்பர் ஜனவரி 31 -ம் தேதி பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நுமைஷ் மைதானத்தில் ஒரு மகாபஞ்சாயத்து நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

காசிப்பூரில் விவசாயிகள் போராட்டத்தை கலைத்த பாஜக – ஜாட் சமூகத்தின் கோபத்தை சீண்டியுள்ளதா?

பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் டிகைத் சனிக்கிழமை ஏஎன்ஐயிடம் கூறுகையில், “பாக்பத்தில் ஒரு மகாபஞ்சாயத்து கலந்துகொண்டுவிட்டு நாளை டெல்லிக்கு பயணிப்போம். விவசாயிகள் பெயரில் நடக்கும் பஞ்சாயத்தில் நடப்பு அரசியல் விவாதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் நட்த்திய டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறைக்குப் பிறகு இம்முன்னேற்றம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்