Aran Sei

ஒரு டோஸ் தடுப்பூசி நோய் பரவலை 50 விழுக்காடுவரை கட்டுப்படுத்தும் – இங்கிலாந்து ஆய்வில் தகவல்

Image Credits: The Economic Times

ஃபைசர் அல்லது ஆஸ்டராஜெனிகா தடுப்பூசியின் ஒரு டோஸ் செலுத்திக் கொள்வதன் மூலம், கொரோனா தொற்று வீட்டின் மற்ற உறுப்பினர்களுக்குப் பரவுவதை 50  விழுக்காடு வரை கட்டுப்படுத்த முடியும் என இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து (பிஎச்இ) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தடுப்பூசி செலுத்தியதற்கு பிறகான மூன்று வாரக் காலத்தில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களிடம் இருந்து நோய் பரவியதை விட செலுத்தியவர்களிடம் இருந்து பரவியது குறைவாக 38 முதல் 49 விழுக்காடு வரை மட்டுமே உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

”இது மிகவும் ஆச்சரியமான தகவல் – தடுப்பூசி உயிரைக் காக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அவை வைரஸ் பரவலையும் குறைக்கிறது என்பதை இந்தத் தரவுகள் காட்டுகிறது” என பிரிட்டனின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.

தடுப்பூசிகளை உடனே வழங்க பிரதமருக்கு முதல்வர் கடிதம் – தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடா?

“கொரோனா பரவலிலிருந்து உங்களைப் பாதுகாப்பதில் தடுப்பூசி ஒரு சிறந்த வழி என்பதை ஆய்வு முடிவுகள் மேலும் வலுப்படுத்துகிறன்றன. மேலும், தடுப்பூசிகள் உங்கள் வீட்டில் உள்ள ஒருவருக்குத் தெரியாமல் தொற்றுவதைத் தடுக்கக்கூடும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளா 10 லட்சம்பேரில் தொற்று பாதித்தவர்களின் தரவுகளுடன், தடுப்பூசி செலுத்துக் கொண்ட 24 ஆயிரம் வீடுகளைச் சேர்ந்த 57 ஆயிரம் பேரில் தொற்று பாதித்தவர்களின் தரவுகளை  ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

லாபமற்ற விலையில் தடுப்பூசி மருந்தை வழங்கத் தயார் – ஃபைசர் நிறுவனம் தகவல்

நோய் பரவலுக்கான உயர் ஆபத்து அமைப்புகளாக குடும்பங்கள் இருக்கின்றன. மேலும் ’இருப்பிட பகிர்வு வசதிகள் மற்றும் சிறைச்சாலைகள்’ போன்ற அமைப்புகளிலும் இதே போன்ற முடிவுகளை எதிர்ப்பார்க்கலாம் என பிஎச்இ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

”தடுப்பூசிகள் நோயின் தீவிரத்தை குறைத்து, நாள்தோறும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளைத் தடுப்பதோடு அல்லாமல், கொரோனா தொற்று மற்றவர்களுக்குப் பரவாமல் கட்டுப்படுத்துவதில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது இப்போது தெரியவந்துள்ளது” என பி.எச்.இ யின் நோய்த்தடுப்பு தலைவர் மேரி ராம்சே கூறியுள்ளார்.

Source : AP

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்