Aran Sei

தேர்தல் பணியின்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஒரு கோடி இழப்பீடு – அலகாபாத் நீதிமன்றம்

த்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தல் பணியின்போது, கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த தேர்தல் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை குறைவாக இருப்பதாகவும், குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

இதுதொடர்பாக தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை, நேற்று (மே 11) நீதிபதிகள் சித்தார்த் வர்மா மற்றும் அஜித் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

‘உபியில் 281 சதவீதம் அதிகரித்துள்ள கொரோனா; சடலங்களை எரியூட்ட விறகின்றி தவிக்கும் மக்கள்’ – பிரியங்கா காந்தி

அப்போது, “குடும்பத்திற்கு சம்பாத்தியம் செய்யும் ஒருவரின் உயிர் இழப்பை ஈடுகட்டும் விதமாகவும், ஆர்டி-பிசிஆர் கொரோனா தொற்று சோதனை கூட மேற்கொள்ளாமல், பணி செய்யும்படி அவர்களை மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் கட்டாயப்படுத்தியதாலும், இழப்பீட்டு தொகையானது குறைந்தபட்சம் ஒரு கோடி வழங்க வேண்டும்.” என்று நீதிபதிகள் பரிந்துரைந்துள்ளனர்.

மேலும், இந்தப் பரிந்துரைகுறித்து மாநில அரசும், தேர்தல் ஆணையமும் ஆலோசித்து, நல்ல முடிவை எடுத்து அடுத்த விசாரணை நாளில் சொல்லும் என்று நம்புகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்