Aran Sei

உக்ரைன் போர்: ‘எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பிரதமர் கூட்ட வேண்டும்’ –ப.சிதம்பரம் வலியுறுத்தல்

க்ரைன் போர் நெருக்கடி குறித்து கலந்தாலோசிக்க எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஒன்றிய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், “உக்ரைன் போர் நெருக்கடி குறித்து பிரதமர் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி வருவது நல்ல விஷயம். அவர் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தையும் கூட்ட வேண்டும். சர்வதேச நெருக்கடியின்போது வெளியுறவுக் கொள்கை மற்றும் அதிகார்ப்பூர்வ நட்வடிக்கைகளை வகுப்பது அரசாங்கத்தின் தனிச்சிறப்புமிக்க கடமை” என்று கூறியுள்ளார்.

“ஆனால், தேசியளவில் ஒருமித்த கருத்தை உருவாக்க அரசாங்கம் எதிர்க்கட்சியை நம்பிக்கைகளையும் கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா எல்லையில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள்: பிஸ்கட் மட்டுமே உண்டு உயிர் வாழும் அவலம்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ஒன்றிய முன்னாள் அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான யஷ்வந்த் சின்ஹா, “1990ஆம் ஆண்டு நடந்த வளைகுடா போரின்போது, ஈராக் மற்றும் குவைத்தில் இருந்து, 1,70,000 இந்தியர்கள் ஏர் இந்தியா மூலம் இந்திய அரசால் மீட்கப்பட்டனர். ஒரு தகவலுக்கு சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஏர் இந்தியாவை ரூ.18,000 கோடிக்கு டாடா குழுமத்திற்கு ஒன்றிய அரசு விற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய பதிவுகள்:

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 1

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 3

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்