Aran Sei

பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்போம் – போர் குறித்து தலாய் லாமா கருத்து

ஷ்யா – உக்ரைன் போர் குறித்து திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா வேதனை தெரிவித்துள்ளதோடு, பிரச்சினைகளும் கருத்து வேறுபாடுகளும் பேச்சுவார்த்தை வழியாக தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக, இன்று (பிப்ரவரி 28), தலாய் லாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைனின் நடக்கும் போரால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். இரு நாடுகளுக்கு இடையேயான வன்முறை மோதலானது, இதர நாடுகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் நமது உலகம் ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

சொந்த மக்களை நாம் கைவிட முடியாது: உக்ரைன் ராணுவத்தால் தாக்கப்படும் இந்திய மாணவர்கள் குறித்து ராகுல் காந்தி கருத்து

“போர் காலாவதியாகிப் போன ஒன்று. அகிம்சை ஒன்றே வழி. அனைவரையும் சகோதர சகோதரிகளாக பாவிப்பதன் வழியாக மனிதநேய உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்படித்தான் நாம் அமைதியான உலகை உருவாக்க வேண்டும். பிரச்சினைகளும் கருத்து வேறுபாடுகளும் பேச்சுவார்த்தை வழியாக தீர்க்கப்படுகின்றன. பரஸ்பர புரிதல் மற்றும் மற்றவர்களுடைய நலன்மீது நாம் வைத்திருக்கும் மரியாதை ஆகியவற்றின் வழியாகவே உண்மையான அமைதி ஏற்படுகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“உக்ரைனில் விரைவில் அமைதி திரும்பும். நாம் நம்பிக்கை இழக்கக் கூடாது. 20ஆம் நூற்றாண்டு போருக்கும் இரத்தக்களரிக்குமான நூற்றாண்டாக இருந்தது. 21ஆம் நூற்றாண்டு உரையாடலின் நூற்றாண்டாக இருக்க வேண்டும்” என்று தலாய் லாமா தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்