Aran Sei

ரஷ்ய படையெடுப்பை முகலாயர்களுடன் ஒப்பிட்ட உக்ரைன்: ‘மோடியின் கவனத்தை பெற இஸ்லாமிய வெறுப்பா?’ -ஓவைசி கேள்வி

ந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இடைக்கால இந்திய வரலாறு குறித்த தன்னுடைய அரைகுறை அறிவை தன்னிடமே வைத்துக் கொள்ளட்டும் என்று ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போரில் ஒரு இந்திய மாணவர் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்த உக்ரைன் தூதர் இகோர் பொலிகா, “உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பை ராஜபுத்திரர்களுக்கு எதிராக முகலாயர்கள் நடத்திய படுகொலையுடன் ஒப்பிட முடியும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘ரஷ்ய படையெடுப்பை முகலாயர்கள் ராஜபுத்திரர்களை படுகொலை செய்ததோடு ஒப்பிடலாம்’ –உக்ரைன் தூதர்

உக்ரைன் தூதரின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அசாதுதீன் ஓவைசி, “இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இடைக்கால இந்திய வரலாறு குறித்த தன்னுடைய அரைகுறை அறிவை தன்னிடமே வைத்துக் கொள்ளட்டும். உண்மையில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்பதற்கான துல்லியமற்ற முறையில் இவ்வகையில் பேசுவது இஸ்லாமோபோபியாவையே காட்டுகிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “முகலாயர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்த அவருக்கு எங்கிருந்து யோசனை வந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்