Aran Sei

வேவு பார்க்கப்பட்டவர்களில் அனில் அம்பானியும் ஒருவர் – ரபேல் ஒப்பந்தத்துடன் தொடர்புடையவர்களும் பட்டியலில் அடக்கம்

Image Credits: Wikipedia

பெகாசிஸ் ஸ்பைவார் வழியாக தொழிலதிபர் அனில் அம்பானியின் தொலைபேசியும் கண்காணிக்கப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

அனில் அம்பானியின் தொலைபேசியெண்ணை போன்று, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானியின் நிறுவனத்தைச் சார்ந்த டோனி ஜேசுதாசனின் தொலைபேசியென்னும் கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உளவு பார்க்கப்பட்ட பத்திரிகையாளர்கள் பட்டியல் – தி வயர் செய்தி நிறுவனம் வெளியீடு

டோனி ஜேசுதாசன் அனில் திருபாய் அம்பானியின் நிறுவனத்தின்(ஏடிஎஜி) கார்போரேட் தொலைத்தொடர்புத்துறையின் தலைவராக பணிபுரிவதாகவும் தி வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,டோனி ஜேசுதாசனின் மனைவியின் தொலைபேசியும் கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

அனில் அம்பானி கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து கண்காணிக்கப்பட்ட அதே தொலைபேசியைப் பயன்படுத்தி வருகிறாரா என்பது தெரியவில்லை என்றும், அவரது தொலைபேசி கண்காணிக்கப்பட்டுள்ளதை உறுதிபடுத்துவதற்கான சோதனையில் ஈடுபடுவது குறித்து போதிய பதிலளிக்கவில்லை என்றும் தி வயர்  செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பெகசிஸ் தொடர்பாக சுயாதீன விசாரணை கோரிய எதிர்க்கட்சிகள்: மறுத்த ஒன்றிய அரசு

மேலும், ரபேல் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ள டஸ்சால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் இந்திய உறுப்பினர் வெங்கடராவ் போசினா, சாப் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இந்திரஜித் சியால் மற்றும் போயிங் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிரத்யூஷ் குமார் ஆகியோரின் தொலைபேசி எண்களும் கண்காணிக்கப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி தெரிவிக்கிறது.

இதில் இந்திரஜித் சியால் அமெரிக்காவை சார்ந்த பாதுகாப்புத்துறை நிறுவனமான டெஸ்ட்ரோன் நிறுவனத்தின் ஆசிய-பசுபிக் பகுதியின் தலைவராக உள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பெகசிஸ் ஸ்பைவேரால் பிரான்ஸ் அதிபர் வேவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்தி – விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள பிரான்ஸ்

இதேபோன்று, பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த ஆற்றல் சார் நிறுவனமான இடிஎப் நிறுவனத்தின் தலைவர் ஹாமஞ்சித் நாகின் தொலைபேசி எண்ணும் கண்காணிக்கப்பட்டுள்ளதாக தி வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்