Aran Sei

‘தலித்துகளுக்கு நீதி கேட்பது குற்றமென்றால், ஜிக்னேஷுடன் நாமும் அக்குற்றத்தை செய்வோம்’ – காங்கிரஸ்

காவல்துறையின் அனுமதியின்றி போராட்டம் நடத்திய வழக்கில், குஜராத் மாநில சுயேட்சி எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தண்டனை வழங்கியது குறித்து, அம்மாநில ஆளுங்கட்சியான பாஜகவை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, இந்தியாவில் தலித்துகளின் பிரச்சினைகளை எழுப்புவதும், அவர்களின் உரிமைகளுக்காக போராடுவதும், சட்டவிரோதமாக சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட அவர்களின் நிலத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்துவதும் குற்றமாகிவிட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“பல தசாப்தங்களாக சட்ட விரோதமாக சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட தலித்துகளின் நிலத்தை அவர்களுக்கே திருப்பித் தரக் கோருவது குற்றமா? பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத்தில் இது குற்றமாகிவிட்டதாகத் தெரிகிறது. இது மகாத்மா காந்தியின் குஜராத்தில் குற்றமாக இருக்க முடியாது. சர்தார் வல்லபாய் பட்டேலின் குஜராத்தில் குற்றமாக இருக்க முடியாது. ஏனென்றால் குஜராத் நீதியின் பூமி. அந்த நீதியின் பூமியில் ஜிக்னேஷ் மேவானி சிறைக்கு அனுப்பப்படுகிறார். காரணம், பிறரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட தலித்துகளின் நிலத்தை மீட்க அவர் போராட்டத்தை நடத்தினார்” என்று அவர் கூறியுள்ளார்.

நான் Flower இல்ல Fire: பிரதமர் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் சில கோட்சே பக்தர்களே எனது கைதுக்கு காரணம் என ஜிக்னேஷ் மேவானி கருத்து

தலித்துகளின் குரலாகி அவர்களுக்கு நீதி கேட்பது குற்றம் என்றால், ஜிக்னேஷ் மேவானியுடன் சேர்ந்து நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் இந்தக் குற்றத்தைச் செய்வோம் என்று ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி ஆசாத் பேரணி நடத்தியதற்காக, குஜராத் சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி மற்றும் 9 பேருக்கு 3 மாத சிறை தண்டனை மற்றும் ரூ 1000 அபராதம் விதித்து குஜராத்தில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2017 ஜூலை மாதத்தில் மெஹ்சானாவிலிருந்து பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தனேரா வரை ஜிக்னேஷ் மேவானி, தேசியவாத காங்கிர்ஸ் நிர்வாகி ரேஷ்மா படேல் மற்றும் மேவானியின் ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் உறுப்பினர் ‘ஆசாதி பேரணி’யை நடத்தினர்.

2017 இல் அனுமதியின்றி பேரணி நடத்திய வழக்கு: ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு

அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பேரணியில் பங்கேற்றவர்கள் மீது சட்டவிரோத கூட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக இந்திய தண்டனைச் சட்டம் 143-ன் கீழ் மெஹ்சானா ’ஏ’ பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று (மே 5), வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை அமர்வு நீதிபதி ஜே.ஏ.பர்மர், குற்றம் சாட்டபட்டவர்களுக்கு தலா 3 மாத சிறை தண்டனையும் தலா ரூ. 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Source: PTI

நாயன்மார்களே பல்லக்குள போகல உங்களுக்கு என்ன? | Surya Xavier Interview

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்