கொரோனா தடுப்பூசி முன்பதிவு இணையதளமான கோவின் மக்களைத் தொழில்நுட்ப ரீதியாக பிளவுபடுத்துவதாக உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் தடுப்பூசி முன்பதிவிற்காக நண்பர்களை நாடுவார்கள் என்ற ஒன்றிய அரசின் வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், தொழில்நுட்ப அறிவு பெற்றவர்களுக்கே தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வதில் சிரமம் உள்ளது என கூறியுள்ளது.
”18 முதல் 44 வயதிற்குட்பட்ட இந்த நாட்டின் கணிசமான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு இணையதளத்தை மட்டுமே நம்பியிருக்கும் வகையில் தடுப்பூசி கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. அத்தகைய டிஜிட்டல் பிளவு காரணமாக அனைவருக்குமான தடுப்பூசி என்ற இலக்கை அடைய முடியாது. சமூகத்தின் விளம்புநிலைப் பிரிவுகளில் உள்ளவர்களைத் தான் இந்த முறை பாதிக்கும். இது சமத்துவத்திற்கான அடிப்படை உரிமை மற்றும் மேற்கண்ட வயதினருக்கான சுகாதார உரிமை ஆகியவற்றில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்” என நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒன்றிய அரசு தடுப்புமருந்தை 100% கொள்முதல் செய்யாதது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி
”பார்வை குறைபாடு கொண்டவர்கள் கோவின்.காம் இணையதளத்தை அணுகு முடியாது என்பது எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கோவின் இணையதளம் சில அணுகள் தடைகளைக் கொண்டுள்ளது.” என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
”மாற்று திறனாளிகள் தாங்களாக இணையதளத்தை பயன்படுத்த முடியாத நிலையில், அவர்களுக்கு முன்பதிவிற்கு விவரங்களைப் பதிவிட கூடுதல் அவகாசம் வழங்கப்படும்” என நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.