டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து காஷ்மீரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டதற்கு ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கவலை தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம்(அக்டோபர் 24), துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இந்தியாவின் கிரிக்கெட் தோல்விக்கு பரவலான விமர்சனங்கள் எழுந்தன.
இத்தோல்வியை விளையாட்டாக மட்டும் எடுத்துக்கொள்ளாமல், உள் அர்த்தம் கற்பிக்கப்படுவதாக குரல்கள் எழுந்தன.
மாணவர் தலைவர் நசீர் குஹாமி, தனது டிவிட்டர் பக்கத்தில், “பஞ்சாபில் உள்ள சங்ரூர் மற்றும் கராரில் (மொஹாலி) காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டனர். உள்ளூர் பஞ்சாபிகள் தங்களை மீட்புக்கு வந்ததாக தாக்கப்பட்ட மாணவர்கள் சொன்னார்” என்று தெரிவித்திருந்தார்.பிஹார், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள் காஷ்மீர் மாணவர்களின் அறைகளில் நுழைந்து அவர்களை வெறித்தனமாக தாக்கினர் என்று நசீர் குஹேமி குறிப்பிட்டிருந்தார்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக உமர் அப்துல்லா, தனது டிவிட்டர் பக்கத்தில், “பஞ்சாபில் உள்ள ஒரு கல்லூரியில் நேற்றிரவு(அக்டோபர் 24) சில காஷ்மீர் மாணவர்கள் மீது உடல்ரீதியாகவும் தகாத வார்த்தைகளாலும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களைப் பற்றி கேள்விப்பட்டது வேதனை அளிக்கிறது. பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சன்னி இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “தாக்குதலுக்கு ஆளான மாணவர்களுக்கு ஆறுதல் கூறி நம்பிக்கையளிக்க வேண்டும். இதுதொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் பஞ்சாப் முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.