Aran Sei

‘பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் சண்டையிடும் என்று எதிர்பார்க்காதீர்கள்’ – உமர் அப்துல்லா

Image Credits: Deccan Herald

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமரீந்தர் சிங் தனது பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சண்டையிடும் என்று எதிர்பார்ப்பது மிக அதிகமான எதிர்பார்ப்பு என்று ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, உமர் அப்துல்லா தனது டிவிட்டர் பக்கத்தில், “பொதுவாக, நான் காங்கிரஸ் கட்சியில் உள்ள சகோதர சண்டைகள் குறித்து பேச மாட்டேன். ஏனெனில், அது அவர்களின் கட்சி, அவர்களின் பாடு. இருப்பினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெளியே உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், காங்கிரஸின் செயற்பாடு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். காரணம், கிட்டத்தட்ட 200 மக்களவை தொகுதிகளில் நேரடி பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மோதுகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் தங்களுக்குள் சண்டையிடுவதில் மும்முரமாக இருக்கும்போது, ​​பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் சண்டை செய்யும் என்று எதிர்பார்ப்பது மிக அதிகமான எதிர்பார்ப்பு என்று நினைக்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்