Aran Sei

ஒலிம்பிக்கில் பங்கேற்ற வில்வித்தை வீரரின் வீட்டை காலி செய்ய மிரட்டியதாகப் புகார் – மிரட்டலுக்குப் பயந்து குடும்பத்தினர் உறவினர்களிடம் தஞ்சம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள வில்வித்தை வீரர் பிரவின் ஜாதவின் வீட்டை அகற்றக்கோரி  சமூகவிரோதிகள் மிரட்டியதால் அவரது குடும்பத்தினர்கள்  உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சதார மாவட்டத்தின்  சரடே பகுதியில்  உள்ள  அவர்களது சிறிய வீட்டை அகற்றக்கோரி அப்பகுதியில் உள்ள சிலர் மிரட்டியதாகவும்,  இதனால் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து 3௦ கிலோமீட்டர் தொலைவில் உள்ள  பாரமதி பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

இதுகுறித்து தெரிவித்துள்ள சதார மாவட்டக் காவல்காணிப்பாளர் அஜய்குமார் பன்சால், “அவர்களது வீடு அரசின் நிலத்தில் தான் உள்ளது, தனியாருக்கும் இந்த நிலத்திற்கும்  தொடர்பில்லை” என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “சதார மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே நிலம் ஒதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். நாங்கள்  அகற்றக்கோரியவர்களை கைது செய்துள்ளோம்.” என்றும்  அவர் கூறியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில்  கூறியுள்ளார்.

இந்த விவகாரம்குறித்து அறிந்ததும்  வில்வித்தை வீரர் பிரவின் ஜாதவ் காவல் நிலையத்திற்கு அழைத்து  அவரது பெற்றோருக்கு பாதுகாப்பு வேண்டியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நீங்கள் எங்களை வெளியேற்றலாம் மௌனிக்க வைக்க முடியாது’ – பெகசிஸ் விவாதம் கோரிய திரிணாமூல் உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

இதுகுறித்து தெரிவித்துள்ள அப்பகுதியைச் சார்ந்தவர், “ஜாதவ்வால் அவரது குடும்பம்  பெருமைக் கொள்ளகூடிய அதே வேளையில், அவரது பெற்றோர்கள் கஷ்டத்தை உணர்ந்துள்ளனர்.  அவர் தாய் விவசாயக்கூலி.  அவர்கள் வீட்டில் தொலைக்காட்சிக் கூட இல்லை.  சிலர் மடிகணினியின் வழியாக  ஜாதவின் போட்டியை அவர்களுக்கு  காட்டினர்” என்றும்  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்