Aran Sei

வடகிழக்கு மாநிலங்களில் பாமாயில் பயிர்செய்ய திட்டமிடும் ஒன்றிய அரசு – சூழலியலாளர்கள் அரசியல்கட்சியினர் கண்டனம்

டகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் பாமாயில் பயிர் செய்யப்படுவதற்கு  சூழலியலாளர்களும், அரசியல்கட்சியினர்களும்  எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய அரசின்   பாமாயில் பயிர் செய்யும் திட்டத்தின் காரணமாக மழைக்காடுகளும், உயிர்பல்லுயிர்த்தன்மையும்  பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 9 அன்று 9.5 கோடி விவசாயிகளுக்கு 19,000 கோடி பிரதமர் விவசாயத் திட்டத்தின் கீழ் 9 வது தவணை நிதிஉதவி அளிக்கும் நிகழ்வில் இணையவழியாகப் பங்கேற்ற  பிரதமர் நரேந்திர மோடி பாமாயில் பயிர் செய்யப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த நிகழ்வில்  பேசிய அவர், “இந்தியர்கள் சமையல் எண்ணெய்க்கு அதிகளவில் இறக்குமதியே சார்ந்துள்ளதால், சமையல் சில்லறை விலை அதிகரித்துள்ளது. எனவே, சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை அடையும் வகையில் புதிய திட்டத்திற்காக 11,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது”  என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மேகாலயா நாடாளுமன்ற உறுப்பினர் அகதா சங்மா, “இந்தப் பகுதியின் “பல்லுயிர் சூழல் பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் சிதையக்கூடிய அபாயத்தில் உள்ளது. மேலும் , வனப்பரப்பு குறைந்து,  காட்டுயிர்கள் அழியக்கூடிய நிலையும் உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

இதேபோன்று இதுகுறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ்,  “1980 களின் பிற்பகுதிகளிலேயே சமையல் எண்ணெய்கள் மீதான தொழில்நுட்பத் திட்டத்தின் வழியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பரந்துபட்ட அளவிலான பாமாயில் பயிர் செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது”  என்று  தெரிவித்துள்ளார்.

மேலும்,இதுகுறித்து தெரிவித்துள்ள  உயிரியலாளர் பிபாப் தாலுக்தார், “பாமாயில் ஒரு ஆக்கிரமிப்பு பயிர். அது வடகிழக்கு மலைப்பகுதிகளில் வளரக்கூடிய இயற்கையான பயிர் இல்லை. எனவே, பல்லுயிர்ச் சூழலுக்கும், மண் வளத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது. அதுமட்டுமின்றி, காடுகள் அற்றப் பகுதியிலும் கூட கடுமையானப் பாதிப்பை உண்டாக்கூடியது”. என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

source: தி இந்து

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்