Aran Sei

மாவோயிஸ்டால் விடுதலை செய்யப்பட்ட சி.ஆர்.பி.எஃப் காவலர்: பொதுமக்கள் ஒருவரை ஈடாக விடுதலை செய்தது காவல்துறை

த்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில், மத்திய பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையில் ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற்ற மோதலில் 22 வீரர்கள் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். அப்போது மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த  கமாண்டோ ராகேஷ்வர் சிங் மான்ஹாஸை மாவோயிஸ்ட்கள் பிடித்துச் சென்றனர்.

மாவோயிஸ்ட்களின் தண்டகார்ன்யா சிறப்பு மண்டலக் குழுச் செய்தி தொடர்பாளர் விகல்ப் ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், “கடத்தப்பட்டுள்ள ராகேஸ்வர் சிங் மன்ஹாஸை விடுவிக்கப் பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களின் தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் பிறகு எங்கள்வசம் இருக்கும் அதிகாரியை விடுதலை செய்வோம். அதுவரை அவர் எங்களிடம் பத்திரமாக இருப்பார்.” என்று தெரிவித்திருந்தார்.

ஆயுதப்படையினரை முகநூலில் விமர்சித்த எழுத்தாளர் – கைது செய்த காவல்துறை

மன்ஹாஸ் கடத்தப்பட்டிருப்பதாகச் சிறப்பு மண்டலக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து ஆராயப்பட்டு வருவதாக பஸ்தார் வரம்பின் காவல்துறை தலைவர் பி.சுந்தர்ராஜ் தெரிவித்ததை அடுத்து, ஏப்ரல் 7 மாவோயிஸ்ட்களின் தற்காலிக முகாமில் மான்ஹாஸ் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து, ஏப்ரல் 8 ஆம் தேதி, மாவோயிஸ்ட்களால் கடத்திச்செல்லப்ப்பட்ட கமாண்டோ ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் விடுதலை செய்யபட்டார். பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில், மன்ஹாஸ் விடுதலைச் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்கு முன்னர், குஞ்சம் சுக்கா என அடையாளம் காணப்பட்ட பொதுமக்களில் ஒருவரை, மத்திய அரசு விடுதலை செய்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மாவோயிஸ்ட்கள் பிடியில் இருந்த சி.ஆர்.பி.எஃப் அதிகாரி – ஐந்து நாட்களுக்குப் பிறகு விடுதலை

2012 ஆம் ஆண்டு, மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட ஒடிசா சட்டபேரவை உறுப்பினர் ஜினா ஹிகாக்காவை விடுவிப்பதற்காக, அம்மாநில அரசால் ஐந்து மாவோயிஸ்டுகள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்