Aran Sei

கொரோனா இரண்டாவது அலை – ‘அதிகாரபூர்வ இறப்பு 109; உண்மையான இறப்பு 2500-ஐ தாண்டுகிறது’ – போபால் சுடுகாடுகளில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வு

சென்ற மாதம், மத்திய பிரதேச தலைநகர் போபாலில் அதிகாரபூர்வ கொரோனா உயிரழப்புகளின் எண்ணிக்கை 109 என்று அறிவிக்கப்பட்ட நிலையில், உண்மையில் 2,500 க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்துள்ளது.

போபாலில் உள்ள மூன்று சுடுகாடுகளிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களை புதைக்க பிரத்தியேகமாக திறக்கப்பட்ட ஒரு இடுகாட்டிலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வில், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட 109 கொரோனா உயிரிழப்புகள் தவிர்த்து, 2,567 கொரோனா நோயாளிகளின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையானது, கடந்த மாதம் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை கணக்கிடப்பட்டுள்ளது.

டெல்லியில் கணக்கிடாமல் விடப்பட்ட 1150 கொரோனா இறப்புகள் : சுடுகாடுகளில் என்டிடிவி நடத்திய ஆய்வு

இந்த காலகட்டத்தில், இந்த மூன்று சுடுகாடு மற்றும் ஒரு இடுகாட்டில், கொரோனா உயிரிழப்பு அல்லாத 1,273 சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.

2019-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் தரவுகளை கவனத்தில் எடுத்துக்கொண்டால், அப்போதைய காலக்கட்டத்தில் 500 சடலங்களையே இந்த நான்கிலும் தகனம் செய்திருக்கிறார்கள் என்று காட்டுகிறது.

நாட்டின் பல பகுதிகளில், அதிகாரபூர்வ கொரோனா உயிரிழப்புகளுக்கும் உண்மையான கொரோனா உயிரிழப்புகளுக்கும் வேறுபாடுகள் நிறைய உள்ளன.

Source : Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்