Aran Sei

விடுதலையாகிறார் சசிகலா: அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்கிய சிறை நிர்வாகம்

ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இம்மாத இறுதியில் விடுதலையாகி வருகிறார். அவர் வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாக இருக்கிறார் என்று அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் சசிகலா விடுதலை குறித்து அதிகாரப்பூர்வ கடிதம் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 22 ஆம்  தேதி அதிமுகவை சேர்ந்த மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாக இருப்பதாக கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்களுக்குப் பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

சசிகலா வருகை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது – முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

முன்னர், டெல்லிக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்டிருக்கும் நினைவகத்தைத் திறக்க அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் தேர்தல் கூட்டணி குறித்தும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சசிகலாவின் மறு வருகை குறித்து பிரதமரிடம் பேசுவார் என்றும் எதிர்பார்த்த நிலையில், சசிகலாவின் வருகை குறித்து எதுவும் பேசவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலா வெளியே வந்தாலும், அதிமுக உடன் இணைய 100 விழுக்காடு வாய்ப்பு  இல்லை என்றும் ஜெயல‌லிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் ச‌சிகலா என்றும் தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிசாமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்