அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பல்வேறு இடையூறுகளுக்கிடையில் புதிய அதிபராக ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் மாநில வாரியாக தேர்வாளர் குழுக்களில் பெரும்பான்மை பெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிகாரபூர்வமாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜோ பைடன் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ளாத அவருடன் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளரும் இப்போதைய அதிபருமான டொனால்டு ட்ரம்பு பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பரப்பினார். தேர்தல் முடிவுகளை மாற்ற சொல்லி அதிகாரிகளை மிரட்டிய ட்ரம்ப்பின் ஒலிநாடா ( audio tape) வெளிவந்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
அமெரிக்க அதிபர் தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை – குழப்பம் இன்று தீருமா?
மாநில வாரியான வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜோ பைடன் 306 தேர்வாளர் குழு வாக்குகளையும், டொனால்டு ட்ரம்ப் 232 தேர்வாளர் குழு வாக்குகளையும் பெற்றுள்ளனர். இந்த முடிவுகளை 50 மாநிலங்களும் வாஷிங்டன் டிசியும் ஏற்கனவே அதிகாரபூர்வமாக அங்கீகரித்து விட்டன என்று சிஎன்என் தெரிவித்தது.
நான்கு மாநிலங்களில் ஜோ பைடனுக்கு ஆதரவான முடிவை மாற்றுவதற்காக டெக்சாஸ் மாநிலம் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ட்ரம்ப் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்திருந்தது குறிப்பிட்த்தக்கது.
அமெரிக்க கலவரம்: சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களால் ஜனநாயகத்தைத் தகர்க்க முடியாது – மோடி
இந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடாளுமன்றத்தில் நேற்று நடந்துள்ளது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
காவல்துறை பாதுகாப்பை மீறி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை உள்ளே விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஆரம்பமானது.
‘டிரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தை வெடித்து தகர்க்கிறார்’ – உலக தலைவர்கள் கண்டனம்
பிரச்சனையைக் கட்டுக்குள் கொண்டுவர கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் காவலர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைக்க முயன்றனர். அப்போது நட்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். 52 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக வாஷிங்டன் டிசி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்தக் கலவரங்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனை அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.