Aran Sei

‘அரசு நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தினால்தான், கஞ்சா பயிரிடுதலை நிறுத்துவோம்’- ஒடிசா கிராமவாசிகள் போராட்டம்

டிசாவின் மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் தங்கள் குறைகளை வலியுறித்தி வித்தியாசமான போராட்டத்தை கையாண்டுள்ளனர்.

கஞ்சாவை பயிரிட்டால், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்படி கடுமையான அபராதமும் தண்டனையும் விதிக்கப்படலாம் என்பதை நன்கு அறிந்திருந்தும், தங்கள் பகுதியில் அனைத்து அரசு நலத்திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்பட்டால்தான், கஞ்சா பயிரிடுதலை நிறுத்துவோம் என்று கிராம மக்கள் வெளிப்படையாக நிபந்தனையை அறிவித்துள்ளனர்.

திரைக்கலைஞர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து பழங்குடிகள் போராட்டம் – காவல்துறை வழக்கு பதிவு

நேற்று(நவம்பர் 22), ராலேகடா கிராம பஞ்சாயத்தில் உள்ள 35 கிராமங்களில் வசிக்கும் சுமார் 10,000 மக்கள், 19 அம்ச கோரிக்கையை முன்வைக்க துலிபுட்டில் கிராமத்தில் ஒன்று கூடியுள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள ராலேகடா கிராமவாசியான கமுலு ஹண்டல், “எங்கள் விவசாய விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை. ரலேகடா மற்றும் அதன் அண்டை கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பெரும்பாலான கிராம மக்கள் கஞ்சா சாகுபடியை நம்பியுள்ளனர். கஞ்சா சாகுபடியில் இருந்து கிடைக்கும் பணத்தை வைத்துதான், எங்கள் குழந்தைகளை அவர்களின் கல்விக்காக தொலைதூர இடங்களுக்கு அனுப்ப முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

“அனைத்து சணல் செடிகளையும் அழிக்க அரசு முடிவெடுத்திருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முடிவு எங்களின் வருமான ஆதாரத்தை முற்றாக அழிக்கும். எங்களின் விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் கஞ்சா சாகுபடியை நிறுத்த மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

துலிபுட்டைச் சேர்ந்த நாராயண் ஹண்டல் கூறுகையில், “கஞ்சா விளைவிப்பது சட்டவிரோதமானது என்பதை நன்கு அறிந்துதான் விளைவித்து வருகிறோம். எங்களின் விவசாய விளைபொருட்களை உரிய விலைக் கொடுத்து வாங்கிக்கொள்ள ஆள் இல்லாததால் எங்களுக்கு வேற வழி தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம், வன உரிமை சட்டத்தின்படி நிலத்தை அளித்தல், விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்தல் போன்ற கோரிக்கைகளை போராடும் கிராமவாசிகள் முன்வைத்துள்ளனர்.

Source: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்