Aran Sei

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சுகாதார பணியாளர்கள் – கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுப்பு

டிசா அரசு இன்று (ஜனவரி 16) முதல் கொரோனா தடுப்பூசி அளிப்பதை தொடங்கவுள்ள நிலையில், சுமார் 15,000 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பல்நோக்கு சுகாதாரத் பணியாளர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் ஒறுங்கிணைந்த முன்னணியின் உறுப்பினர்கள், தாங்கள் பதவி உயர்வு விஷயத்தில் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

‘கோவிட் போர்வீரர்களின் வேலையை பறிப்பதுதான், பொங்கல் பரிசா?’ – கனிமொழி கண்டனம்

இதுகுறித்து, ஒடிசா மாநில ஆண் பல்நோக்கு சுகாதாரத் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திர நாத் பிரதான் கூறுகையில், “ஒடிசா மாநில அரசு மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் செவிலியர்களுக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, எங்களின் பணி தொடர்பான விதிகளில் மாற்றம் கொண்டுவருமாறு, நாங்கள் மாநில அரசிடம் கெஞ்சி வருகிறோம். நாங்கள் சேர்ந்த அதேநேரத்தில் சேர்ந்த மற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு இதுவரை ஒருமுறை மட்டுமே கிடைத்துள்ளது.”என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

ரயில்வே துப்புரவுத் தொழிலாளர்களை முழுநேர ஊழியர்களாக அறிவித்திடுக – வைகோ

“கொரோனா பெருந்தொற்று காலத்தில், நாங்கள் கள பணியில் அயராது உழைத்தோம். நாங்கள் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்வதற்கான மாதிரிகளை வாங்குவதில் உதவினோம். கொரோனா தொற்று தொடர்பாக அமைக்கப்பட்ட பல்வேறு மையங்களில் வேலை பார்த்தோம். அப்படி இருந்தும், நாங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளோம்.” என்று அவர் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில், எல்லா சங்கங்களும் இணைந்து இரண்டு முறை எழுத்துப்பூர்வமாக கோரிக்கையை அரசிடம் வழங்கியிருந்தன என்றும் ஆனால் இந்த விவகாரம் குறித்த பேச்சு வார்த்தை நடத்த அரசு தரப்பிடம் இருந்து அவர்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும் சங்க உறுப்பினர்கள் குறிப்பிட்டதாக தி இந்து கூறியுள்ளது.

ஒப்பந்ததாரருக்கு எதிராக துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்

மேலும், பல சங்க உறுப்பினர்களுக்கு இன்று (ஜனவரி 16) கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  நாங்கள் தடுப்பூசி முகாம்களில் பணியாற்றுவோம். ஆனால், தடுப்பூசி எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று அவர்கள் அறிவித்துள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்